fbpx

இரவில் வேலை செய்துவிட்டு பகலில் தூங்கினால் நல்லது என்று நினைக்கிறீர்களா..? அப்படினா இந்த பிரச்சனைகளை சந்திக்க தயாரா இருங்க..!!

வாழ்க்கை முறையில் உணவை ஒருவேளை தள்ளிப்போடலாம். ஆனால், தூக்கத்தை அப்படி தள்ளிப்போட முடியாது. இரவு உறக்கத்தை மறுநாள் காலையில் ஈடு செய்துகொள்ளலாம் என்று நினைத்தாலும் உடல் அதற்கு ஏற்றுக்கொள்ளாது. சுப நிகழ்ச்சிகளின்போது எப்போதாவது ஒருமுறை இரவு கண்விழித்திருப்பது வழக்கம். அதற்கே 2, 3 நாட்கள் களைப்பு தீராமல் சோர்வாக இருப்போம். தற்போது நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் கணக்கில் இரவும் பகலும் (Day, Night Shift) மாறி மாறி வேலை செய்கின்றனர்.

இரவு தூக்கம் என்றால் இவர்கள் மிக சாதாரணமாக சொல்வது, அதுதான் பகல் பொழுது இருக்கே. அப்போது தூங்கி கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள். இரவு நேர அமைதி, இருட்டு, மன அமைதி ஆகியவற்றை பகல் வெளிச்சம் கொடுக்காது. மூளை பகுதியிலுள்ள பீனியல் சுரப்பியில் மெலடோனின் சுரப்பதால்தான் நமக்கு தூக்கமே வருகிறது. இது சுரப்பதற்கும் குறிப்பிட்ட நேரம் உண்டு.

இவை பகலில் சுரப்பதில்லை. இரவில் மட்டும் சுரக்கும். பகலில் நாம் வெளிச்சத்தை உணரும்போதே இந்த மெலடோன் சுரப்பு நின்றுவிடும். அதனால் பகலில் தூங்கினாலும் அது உடலுக்கு ஓய்வுதானே தவிர நிம்மதியான தூக்கம் என்று சொல்லிவிட முடியாது. இதில் அதிகம் பாதிக்கப்படுவோர், மாதம் ஒரு ஷிப்ட் என பகல், இரவு மாறிமாறி வேலைப்பார்ப்பவர் தான். இவர்கள் உறங்கும் பழக்கத்தை அவ்வப்போது மாற்றும் போது விழிப்பையும், உறக்கத்தையும் கட்டுப்படுத்தும் மூளையானது குழப்பமடையும்.

இதனால் உறக்கமின்மை என்னும் நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும். வருடக்கணக்கில் இதே நிலை தொடர்ந்தால், உடலில் பலவிதமான நோய்கள் உண்டாகும். இரவு நேரங்களில் கல்லீரானது தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதோடு புதுப்பித்துக் கொள்ளவும் செய்கிறது. இவை தூங்கும்போது மட்டுமே நடைபெறுவதால், விழித்துக் கொண்டிருக்கும்போது கல்லீரல் வேலை செய்ய முடியாமல் போகிறது. இதனால் விரைவில் முதுமை எட்டிப்பார்ப்பதோடு அனைத்து நாடி நரம்புகளும் வலுவிழந்து போகிறது.

உடல் உறுப்புகள் ஒருபுறம் பலவீனமாகிறது என்றால் மனமும் அதன் கூடவே பலவீனமாகிறது. அன்றாடம் இரவு தூக்கத்தைத் தொலைத்தால் மன அழுத்தம், அதிக கோபம், வெறுமை, தனிமைப்படுத்தியது போன்ற உணர்வு, எரிச்சல், மன சோர்வு, தன்னம்பிக்கை இன்மை, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உருவாகக்கூடும். தூக்கமும் விழிப்பும் சமநிலையில் இருக்க வேண்டும். முன்னோர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைகள் விழிப்புணர்வு அடைந்தால் தான் வரும் தலைமுறை வளமாக இருக்கும்.

Read More : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா..? அதிருப்தியில் மூத்த அமைச்சர்கள்..? சமாதானம் செய்யும் தலைமை..!! திமுகவில் சலசலப்பு..!!

English Summary

The liver cleanses itself and renews itself at night.

Chella

You May Like