தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் கனமழை வெளுத்து வாங்கும். ஆனால், இந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே பெய்து வருகிறது. இந்த மழைக்காலம் மனதிற்கு அமைதியைக் கொடுப்பதோடு, சுற்றுப்புறச் சூழலை இதமாக மற்றும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. அதே நேரம் இந்த சீசனில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் நம்முடைய வீடுகளுக்குள்ளும் ஒருவித ஈரப்பதம் நிலவுகிறது.
இது போன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் ஏசியை பயன்படுத்தினால், கூல் மோட்-க்கு (Cool Mode) பதிலாக டிரை மோட்-ஐ (Dry Mode) பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெயருக்கு ஏற்றார் போல Dry Mode-ஆனது காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் அறை வெப்பநிலையை பராமரிக்கிறது. இது அறையை குளிர்விப்பதோடு மட்டுமின்றி, அங்கிருக்கும் ஈரப்பதத்தையும் குறைக்கிறது.
மழை சீசனில் Cool Mode என்பது முற்றிலும் பயனற்றது என்று இதற்கு அர்த்தம் கிடையாது. மழை சற்று குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இல்லாமலும் இருக்கும் சூழலில் நீங்கள் உங்கள் ஏசி-யில் கூல் மோட் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் ஏற்கனவே வெளியில் உள்ள காற்று குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் உங்கள் ஏசி-யின் வெப்பநிலையை மிக குறைவாக செட் செய்ய வேண்டாம். அறை அதிகமாக கூலிங் ஆனால் மழைக்காலத்தில் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். எனவே, -யின் டெம்ப்ரேச்சரை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் ஏசி-யின் ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இது ஏசி-யின் செயல்திறனை நன்றாக வைப்பதோடு, அறையில் காற்றையும் சுத்தமாக வைத்திருக்கும். ஏசி-யை இயக்கும் போது குறிப்பிட்ட அறையில் காற்று சுழற்சியை பராமரிப்பது முக்கியம். எனவே, அறையில் இருப்பதை தவிர புதிய காற்றை அறைக்குள் அனுமதிக்க சிறிது நேரம் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.
நாள் முழுவதும் ஏசி-யை ஆன் செய்து வைக்காமல், தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள். ஏசி தேவை இல்லை என்று நீங்கள் நினைக்கும் போது சிறிது நேரம் அதனை ஆஃப் செய்து வைப்பது மின்சார செலவை உங்களுக்கு மிச்சப்படுத்தி கொடுக்கும். பருவமழையின் போது, பலத்த புயல்கள் இருக்கும். எனவே, அந்த சமயத்தில் ஏசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். புயல் முடிந்ததும், ஏசியின் அவுட்டோர் யூனிட்டை சரிபார்த்து, குப்பைகளை அகற்றிவிட்டு, உங்கள் ஏசியை மீண்டும் ஆன் செய்து கொள்ளலாம்.
Read More : பெண்களே..!! உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..? இந்த பிரச்சனை இருக்கா..? இதுக்கு தீர்வு தான் என்ன..?