fbpx

குழந்தைகளை தூங்க வைக்க ஏசி பயன்படுத்துறீங்களா..? பெற்றோர்களே அப்படினா இதை மட்டும் மறந்துறாதீங்க..!!

குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் இருக்கும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற கேள்வி இருக்கும். அதைப்பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து ஏசிகளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது சில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

AC பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

* ஏசி காற்று நேரடியாக குழந்தையின் மேல் படும்படி படுக்க வைக்கக் கூடாது. ஏசியின் டெம்பரேச்சர் 24 – 28 டிகிரி வரை வைக்க வேண்டும். 24 டிகிரிக்கு கீழ் வைத்தால் ஹைபோ தெரபி போன்ற பல பிரச்சனைகள் வர இருக்கிறது.

* ஏசி அறையை விட்டு குழந்தைகளை உடனடியாக வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. ஏசியை அணைத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்த பிறகு தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

* கை, கால், தலை போன்ற பகுதிகளை நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டால், சளி பிடிக்க நேரிடும். குறிப்பாக, வயிறு மற்றும் நெஞ்சு பகுதி வெதுவெதுப்பாகவே இருக்க வேண்டும்.

* வாரம் ஒரு முறை ஏசியின் பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் உள்ள தூசிகளின் மூலமும், பாக்டீரியாக்களின் மூலமும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

* ஏசி காற்றில் தொடர்ச்சியாக இருக்கும் போது, தோல் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்சரைஸர் பயன்படுத்த வேண்டும்.

* ஏர் கூலர் பயன்படுத்தும் போது ஜன்னல் பக்கம் அல்லது கதவு ஓரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

* ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு ஏர் கூலர் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Read More : 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொதுத்தேர்வு வினாத்தாளில் குளறுபடி..!! போனஸ் மதிப்பெண் வழங்குவதாக அறிவிப்பு..!!

English Summary

Let’s now look at the guidelines that should be followed when using AC for children.

Chella

Next Post

சூப்பர்..! எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி...! தமிழக அரசு அறிவிப்பு

Tue Apr 22 , 2025
Tamil Nadu government announces financial assistance of Rs. 1000 per month for children affected by AIDS...!

You May Like