நாம் கேட்பதை எல்லாம் கொடுக்கும் ஒரு செயலி தான் யூடியூப். குண்டூசி முதல் விமானம் வரை தயாரிப்பது எப்படி? உணவு வகைகள், மருந்து வகைகள் உட்கொள்வது எப்படி? செய்வது எப்படி? என யூடியூபில் கிடைக்காத தகவல்களே இல்லை. அதனால் தான் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயன்படுத்துகிறார்கள்.
ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த யூடியூப், இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத வருமானம் தரும் தளமாக மாறியிருக்கிறது. தற்போது யூடியூப் சேனல் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். திறமை இருந்தால் போதும், முதலீடு தேவையில்லை. தங்களிடம் இருக்கும் இசை, பாட்டு, சமையல்கலை, பலகுரல் போன்ற திறமைகளை வைத்து பல யூடியூபர்கள், மாதம் பல லட்சங்களை வருவாயாக ஈட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரலங்களும் செலிபிரிட்டி ஆகி வருகின்றனர்.
ஆனால், அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க ப்ரீமியம் முறையை தேர்வு செய்ய சந்தாதவர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், பலரும் ஆட் பிளாக் முறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இதனை கண்டறிந்த யூடியூப் நிறுவனம், ஆட் பிளாக் முறையை பயன்படுத்தி 3 வீடியோ பார்ப்பவர்கள் அதற்கு மேல் வீடியோவை பார்க்க இயலாது. தாங்கள் ஆட் பிளாக் விஷயத்தை விரும்பும் பட்சத்தில், கட்டாயம் பிரீமியத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.