Chrome, Firefox, Edge மற்றும் Brave போன்ற வெப் பிரவுசர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த தளங்களை பயன்படுத்தும் யூசர்கள் உடனடியாக தங்களது பிரவுசர்களை அப்டேட் செய்யுமாறு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஏனெனில், ஹேக்கர்கள் யூசர்களின் கம்ப்யூட்டர்களை எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டார்கெட் செய்யப்பட்ட யூசர்களின் சிஸ்டங்களில் ரிமோட் ஆக்சசை பெற்று, வைரஸ் கோட்களை அனுப்புவதன் மூலமாக சிஸ்டத்தில் சேமிக்கப்பட்டுள்ள ரகசியத்திற்கு உட்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் சேகரித்து வருகின்றன. இந்த பிரச்சனை ஏற்கனவே பெரிய பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்தப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் பரவி வருவதாகவும், பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களில் வெப் பிரவுசர்களை பயன்படுத்தும் மில்லியன் கணக்கான யூசர்களை மட்டுமே இந்த பிரச்சனை டார்கெட் ஆக வைத்திருக்கவில்லை.
Google, Mozilla மற்றும் Microsoft போன்ற நிறுவனங்கள் பிரவுசர் அப்டேட்டுகளை ஏற்கனவே வெளியிட தொடங்கியுள்ளன. நீங்கள் பயன்படுத்தி வரும் வெப் பிரவுசர் பாதுகாப்பான வெர்ஷனா என்பதை தெரிந்துகொள்ள உதவும் சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு Google Chrome version 116.0.5846.187
* விண்டோஸ் பயனாளர்களுக்கு Google Chrome version 116.0.5845.188
* Firefox version 117.0.1, Firefox ESR 102.15.1, மற்றும் Firefox ESR 115.2.1
* Edge version 116.0.1938.81
இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் வெப் பிரவுசர்களுக்கு மட்டுமல்லாமல் Signal, Telegram, LibreOffice, Gimp போன்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களுக்கும் பெறப்பட்டு வருகிறது. இந்த அப்ளிகேஷன்களும் தொடர்ந்து தனது யூசர்களுக்கு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. எனவே, எந்த ஒரு சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு உங்கள் வெப் பிரவுசர்கள் மற்றும் அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.