fbpx

உங்க கண்ணுக்கு லென்ஸ் யூஸ் பண்றீங்களா?… கண் பார்வை பறிபோகும் அபாயம்!… மருத்துவர் கூறும் உண்மை இதோ!

காண்டக்ட் லென்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

ஜிபி சாமுவேல் என்ற நபர், சிறு வீடியோக்களை ஆன்லைனில் பதிவிட்டு வருகிறார். இந்த முறை, “ஏன் நீங்கள் காண்டாக்ட் லென்ஸ் அணியக் கூடாது” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லீசெஸ்டர் நகரில் வசித்து வரும் மேரீ மேசன் என்பவருக்கு, காண்டக்ட் லென்ஸ் அணிந்ததும் திடீரென்று கண்களில் பிரச்சனை ஏற்படத் தொடங்கியுள்ளது. உடனடியாக அவர் மருத்துவரை சந்தித்துள்ளார். நீங்கள் காண்டக்ட் லென்ஸ் அணிந்தவாறே எப்போதும் ஷவரில் குளித்துள்ள காரணத்தால் தான் கண்களில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவரும் கூறியுள்ளார்.

கண் மருத்துவரை சந்தித்த பிறகுதான் அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் அபாயம் புரியத் தொடங்கியது. காண்டக்ட் லென்ஸ் மூலமாக அவருக்கு தீவிரமான தொற்று ஏற்படடிருந்தது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தது. “இந்த தொற்றுக்கு குழாய் நீரில் இருக்கும் ஒட்டுண்ணிகள் காரணமாக இருக்கலாம். இவைதான் நீங்கள் குளிக்கும் போது உங்கள் காண்டாக்ட் லென்ஸ் வழியாக கண்களுக்குள் சென்றிருக்கும். அசந்தமீபா என்ற ஒட்டுண்ணி தான் இதற்கு காரணமாகும்” என கண் மருத்துவர் விளக்கமாக கூறியுள்ளார்.

அவருக்கு கொடுத்துள்ள ஆண்டிபயோடிக் ஒழுங்காக வேலை செய்யாததால், இந்தப் பிரச்சனைக்கு வைரஸோ அல்லது பாக்டீரியாவோ காரணமாக இருக்காது எனக் கூறுகிறார் ஜிபி சாமுவேல். இந்தப் பென்மணி கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மூன்று முறை கருவிழி மாற்று அறுவை சிகிசை செய்தும் அவருக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. முடிவில், அவரது கண் முழுவதையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவருக்கு அசந்தமீபா மிக அரிதாகவே தாக்கும். 5000 நபர்களில் ஒருவர் மட்டுமே இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார். ஆனால் இந்த தொற்று தீவிரமானால், நமது பார்வை முழுதும் பறிபோய்விடும் என எச்சரிக்கிறார் டிக்டாக் மருத்துவர். மேலும், காண்டக்ட் லென்ஸ் அணிவதால் ஏற்படக் கூடிய தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

“தூங்கும் போதும், நீச்சலடிக்கும் போதும், குளிக்கும் போதும் காண்டக்ட் லென்ஸ் அணியாதீர்கள். காண்டாக்ட் லென்ஸை தொடுவதற்கு முன் உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்துங்கள். லென்ஸ் வைத்திருக்கும் கவரை அடிக்கடி மாற்றுங்கள்” என விளக்குகிறார். “நான் மருத்துவர் ஆனதிலிருந்து ஒருபோதும் செய்யாத 10 விஷயங்கள்” என்ற தலைப்பில் உள்ள மற்றொரு வீடியோ க்ளிப்பில், ஒருபோதும் கண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டதில்லை என்கிறார். காண்டாக்ட் லென்ஸின் தீவிரத்தன்மை குறித்தும் பலருக்கும் தெரியவில்லை. இதன் மூலம் ஏற்படும் சிறிய தொற்று ஒருவரின் பார்வையை முழுதும் மழுங்கடித்துவிடும் என வருந்துகிறார்.

Kokila

Next Post

போலீசாரை இடிக்க வந்த கருப்பு நிற கார்!! அதிகாலையில் பதறவைக்கும் என்கவுண்டர் சம்பவம்…!

Tue Aug 1 , 2023
தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை. வாகன தணிக்கையின் போது, வாகனத்தை நிறுத்தாமல், காவல்துறை வாகனத்தின் மீது மோதி நிறுத்தியதாகவும், மேலும் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியதால் என்கவுண்டர் எனத் தகவல் . கொல்லப்பட்ட இருவரும் ஓட்டேரியை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் […]

You May Like