fbpx

நீங்க கண்ணாடி யூஸ் பண்றீங்களா..? இந்த உணவுகளை சாப்பிட்டால் அது தேவையே இல்லை..!!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் அலுவலக வேலை காரணமாக நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் நமது உடல்நிலை மோசமாவதோடு, கண்களும் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, முன்னெப்போதையும் விட உங்கள் கண்களை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட உணவுகளை நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலம்.

மீன் : உங்கள் டயட்டில் மீனை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள் : பச்சை இலை காய்கறிகளும் கண்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் கண்களுக்கு உகந்த வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளது. இதனால், இவற்றை தினசரி டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Add New Post

நட்ஸ் : உலர் பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் பல்வேறு வகையான நட்ஸ்கள் நம் பார்வையை மேம்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆகையால், சியா விதைகள், ஆளி விதைகள், சணல் விதைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உலர் பழங்கள் : உங்கள் டயட்டில் பல்வேறு வகையான உலர் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில், வைட்டமின் ஈ சத்துகள் அதிகமுள்ளதால், வயதாவதால் வரக்கூடிய கண் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் முந்திரி, வேர்க்கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை நிறைந்துள்ளன. இது கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கின்றன.

கேரட் : வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கேரட்டில் அதிகம் உள்ளது. கண்ணில் உள்ள புரதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு : சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதுதவிர முட்டை மற்றும் இறைச்சியும் கூட கண்களுக்கு ஆரோக்கியமான உணவாகும்.

Read More : அரிய வகை நோயால் நரக வேதனையை அனுபவிக்கும் தமிழ் நடிகை..!! உடலில் இப்படி ஒரு பிரச்சனையா..?

English Summary

If you want your eyes to be healthy, you must eat certain foods. About that in this post.

Chella

Next Post

'காஜல் அகர்வால் முதல் ஸ்ருதி ஹாசன் வரை..' பிரபலங்கள் பருகும் கருப்பு தண்ணீர்..!! இந்த Black water-ல அப்படி என்னதான் இருக்கு? 

Sat Jun 15 , 2024
From athletes to film stars, black water is now trending on social media. What is black water?

You May Like