fbpx

மாதவிடாய் காலத்தில் டேம்பான்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்..? இந்த நோய் ஏற்படும் அபாயம்..!!

மாதவிடாய் காலத்தில் டேம்பான்ஸ் பயன்படுத்துவதால் டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டேம்பான்ஸ் என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கின், மென்ஸ்சுரல் கப் போன்ற ஒரு பொருள் தான். பெண்ணுறுப்பின் உள்ளே இதைப் பொருத்துவதன் மூலமாக உதிரப்போக்கை அது உறிஞ்சிக் கொள்கிறது.

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய மற்ற பொருட்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான பலன்கள் இந்த டேம்பான்ஸ் பயன்பாட்டில் உண்டு. அதாவது, இதைப் பொருத்திக் கொண்டு நீங்கள் இயல்பாக நீச்சல் குளத்தில் கூட நீந்திச் செல்லலாம். ஏனென்றால், நமது உடலில் கூடுதலாக ஒரு பொருளைப் பொருத்தியிருக்கிறோம் என்ற உணர்வை இது ஏற்படுத்தாது. மிகச் சரியாகப் பொருத்தும் பட்சத்தில் இலகுவான உணர்வைத் தரும்.

இந்த டேம்பான்ஸ் முழுக்க முழுக்க பஞ்சு பொதிகளால் ஆனதாக இருந்தாலும், சிலருக்கு பிறப்புறுப்பில் எரிச்சலை உண்டாக்கலாம். பொதிகளால் ஆனதாக இருந்தாலும் ஆரம்பத்தில் சிலருக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்புண்டு. மேலும் இதனை பயன்படுத்தும் போது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், உதிரப்போக்கில் இருக்கும் ரத்தத்துடன் உடலில் இருக்கும் ஸ்டெஃப்பிலிக்காக்கஸ் என்னும் பாக்டீரியா கலந்து நச்சுத்தன்மை உண்டாகி, டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : ”மக்கள் சக்தியே முதன்மையானது”..!! ”எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”..!! பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு..!!

English Summary

Reports suggest that using tampons during menstruation may increase the risk of developing toxic shock syndrome.

Chella

Next Post

”உடற்பயிற்சியே செய்தாலும் இவர்களுக்கு இதயநோய் வருமாம்”..!! புதிய ஆய்வில் முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

Sun Feb 9 , 2025
Recent studies have shown that people who sit for long periods of time, even if they exercise, are more likely to develop heart disease.

You May Like