fbpx

சொந்த வாகனங்களை இதற்காக பயன்படுத்துறீங்களா..? சிக்கினால் அவ்வளவு தான்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை டூரிஸ்ட் பர்மீட்டு பெறாமல் சவாரியாக பதிவு செய்து இயக்குவதாக புகார்கள் எழுந்த நிலையில், சொந்த வாகனங்களை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டூரிஸ்ட் உபயோகத்திற்கான டி-போர்டு பர்மிட் வழங்கப்படுகிறது.

இதனை மீறி முறையான டூரிஸ்ட் பர்மிட் பெறாமல் சொந்த வாகனங்களை அரசின் விதிமுறைகளை மீறி பயன்படுத்துவதை தடுக்க தீவிர கண்காணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 5,273 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில், 155 வாகனங்கள் விதியை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படும் என அரசு எச்சரித்துள்ளது. சொந்த உபயோகத்திற்கு வாங்கக்கூடிய வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆத்தாடி..!! தினமும் அலுவலகத்திற்கு விமானத்தில் சென்று வரும் ஊழியர்..!! கொரோனாவால் 900 கிமீ பயணம்..!!

Fri Jan 12 , 2024
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெனரல் பத்திரிகை நிருபர் ஒருவர் தினசரி விமானத்தில் தான் அலுவலகம் சென்று வருகிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய வாழ்க்கை சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை பதம் பார்க்கும் காற்று மாசும் வெளியில் கிளம்பி வீடு திரும்புவதற்குள் ஒரு வழியாக்கி விடுகின்றன. ஆனால், இத்தகைய சிரமங்கள் எதுவுமின்றி தனது அலுவலகத்திற்கு […]

You May Like