சானிடரி நாப்கின்கள் இலவசமாக கேட்ட பெண்ணுக்கு பதில் அளிக்கையில் ’உங்களுக்கு காண்டமும் இலவசமாக வேண்டுமா? ’ என பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஜோத் கவுர் பர்மா என்பவர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உள்ளார். யுனிசெப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி மற்றும் பட்டறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கேற்றார். அப்போது அங்கிருந்த ஒரு மாணவி ’அரசு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க முடியுமா ? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஹர்ஜோத் .. ’ நாளை அரசாங்கம் ஜீன்சையும் தரலாம் என கேட்பீர்கள், அதற்கு பின்னர் ஏன் அழகான காலணிகள் தரக்கூடாது என்பீர்கள். உங்கள் குடும்பத்தில் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் கூட நீங்கள் சரிசமமாக கேட்பீர்கள். ஏன் காண்டம் கூட கேட்பீர்கள்’’ என்று பதில் அளித்தார்.
நாங்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளோம் எங்களுக்கு இலவசமாக வழங்குவதில் என்ன உள்ளது என மாணவி கேட்டதற்கு ’’ இது முட்டாள்தனத்தின் உச்சமாக உள்ளது. அப்படி என்றால் வாக்களிக்காதீர்கள். பாகிஸ்தானைப் போல இருங்கள், நீங்கள் பணத்திற்காகவும் சேவைக்காகவுமா வாக்களிக்கின்றீர்கள்?