ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்ப உறுப்பினரின் பெயரை சேர்ப்பது, பெயரை நீக்குவது, முகவரி மாற்றுவது உள்ளிட்ட பல விவரங்களை மாற்ற வேண்டியிருக்கும். இதற்கான சூப்பர் வாய்ப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது பிபிஎல், ஏபிஎல் கார்டு வைத்திருப்போருக்கு உணவுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு திருத்தம் செய்ய 9 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அக்டோபர் 13ஆம் தேதி வரை ரேஷன் கார்டு திருத்தம் செய்து கொள்ளலாம்.
கர்நாடக மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ரேஷன் கார்டு அப்டேட் செய்யும் பணி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினரும் ரேஷன் கார்டை திருத்த மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.