fbpx

பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா..? இனி உங்க வேலை ஈசியா முடிஞ்சிரும்..!! சூப்பர் அறிவிப்பு..!!

வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது அதிகரித்துள்ளது. இதையடுத்து, தேவையை சமாளிக்கும் விதமாக புதிதாக 1,231 பொறியாளர்களுக்கு நிலங்களுக்கான பட்டா உட்பிரிவு பணிகளை மேற்கொள்ள நில அளவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமானது ரியல் எஸ்டேட். குறிப்பாக, பத்திரப்பதிவில் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. சென்னை, கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் வீடு, மனை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வீடு, மனைக்கான பத்திரம் மாற்றுவோர், கையோடு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் அரசிடம் விண்ணப்பிப்பார்கள், அதற்கான விண்ணப்பங்கள் வழக்கத்தைவிட கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

ஒரு நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு அந்த நிலத்தை அளக்க வேண்டியது நிலஅளவையரின் பணியாகும். பொதுவாக ஒரு நிலம், வீட்டு மனைகளாக மாற்றப்படும் போது, பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பல்வேறு பாகங்களாக மாற்றப்படும் நிலங்களாக உட்பிரிவு பட்டாவாக கணக்கிடப்படும். அந்த உட்பிரிபு பட்டா கோரி மக்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சியின் அல்லது நகராட்சியின் நில அளவையாளர் நேரில் சென்று அளந்து, எல்லைகளை வரையறுக்க வேண்டும்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில், குறுவட்ட நிலையில் நில அளவர்கள் இருக்கின்றனர். கிராமத்துக்கு ஒருவர் வீதம் நில அளவர் இருந்தால் மட்டுமே, இப்பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. நிலத்தை அளக்கும் நில அளவையர்கள் போதிய அளவில் இல்லாமல் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. நில அளவையர் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணி குறித்த பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். உட்பிரிவு கோரி வரும் கோப்புகளில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க இவர்கள் பயன்படுத்தப்படுவர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நில அளவை பணிக்கு உரிமம் எப்படி பெறுவது? இதற்கு நில அளவை மற்றும் நிலவரித்துறை இயக்குனர் ஒருமுறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தினல் 3 ஆண்டுகள் டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நில அளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்குரிய 3 மாத பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலஅளவைப் பயிற்சி நிலையம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ளது.

Read More : ’இனி விடிய விடிய ஏசி ஓடினாலும் இதை மட்டும் பண்ணிடுங்க’..!! ’கரண்ட் பில் அதிகம் வராது’..!! மின்சார வாரியம் டிப்ஸ்..!!

Chella

Next Post

இந்த தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி..? கொ.ம.தே.கட்சியின் Ex வேட்பாளர் சதி..!! சொந்த கட்சிக்குள் இப்படியா..?

Thu Apr 11 , 2024
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்திக்கு பதிலாக, வி.எஸ்.மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பற்றி வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, கட்சி தலைமை வேட்பாளரை மாற்றி அறிவித்தது. இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அதிமுகவிடம் தனது வெற்றியை பறிகொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக தலைமைக்கு உளவுத்துறை ரகசிய […]

You May Like