fbpx

உங்களுக்கு திருமணம் ஆகணுமா? அப்போ இந்த கோயிலுக்கு மறக்காமல் போங்க.!!

திருமணம் ஆகாமல் கஷ்டபடுவர்கள் திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்று வந்தால் உடனடியாக திருமண வைபோகம் கைக்கூடும்.

திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த ஊர் என்று அர்த்தம். அதாவது, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த தெய்வ சக்தி நிறைந்த பூமி இது. கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவர் ஸ்ரீமகாவிஷ்ணு. இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் – பார்வதியும், விஷ்ணுவும் – லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த பெருமைக்குரிய தலம்தான் திருமணஞ்சேரி. கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால். இரண்டுக்கும் நடுவில் திருமணஞ்சேரி அமைந்துள்ளது. பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள். அப்படி பசுவான பார்வதிதேவி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவபெருமானை மணந்தார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார்.
நான்முகனான ஸ்ரீபிரம்மா, புரோகிதர் ஸ்தானத்தில் இருந்து சிவ பார்வதி திருமண வைபவத்தை நடத்தி வைத்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்தத் திருமணக் காட்சியை தூணில் சிற்ப வடிவமாகத் தரிசிக்கலாம்.

திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். உத்ஸவரின் திருநாமம் உத்வாக நாத ஸ்வாமி. அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயணர். ஸ்ரீதேவி, பூதேவி. சகிதமாக இருக்கும் உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள்.சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றார். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது. கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முக்கியமான திருவிழா அவரது திருக்கல்யாணம்தான். அந்தத் திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. திருமணஞ்சேரியில் பெருமாள் மேற்கே பார்த்து இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. திருமணத்திற்காகக் கல்யாணசுந்தரரும் கோகிலாம்பாளும் கிழக்கு நோக்கி அமர, அதை நடத்தி வைத்த மைத்துனர் மகாவிஷ்ணு மேற்கே பார்த்து அமர்ந்தாராம். இங்கே அவர் லட்சுமியைப் பக்கத்திலோ அல்லது தன் திருமார்பிலோ தாங்கவில்லை. தாயாரை தன் மடியிலேயே தாங்கிய கோலத்துடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார்.

இங்கே பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு ஹஸ்த நட்சத்திரம் மற்றும் புதன் கிழமைகளில் மூலிகைத் தைலாபிஷேகம் செய்வதும், நெய் தீபமேற்றி 11 முறை வலம் வருவதும் உடல் ஆரோக்யத்தை அளிக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் ஐந்து தலை நாகருக்கு தீபமேற்றி வழிபடுகிறார்கள். இப்படி சிவனும் விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரிக்கு வந்து தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் சிறந்து வாழலாம் என்று கூறப்படுகிறது.

Read More:சென்னையில் ‘பிரேமலு’ பட நடிகையை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ!!

Baskar

Next Post

வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரத்தில் அபராதம் விதிக்க கூடாது...! காவல்துறை அதிரடி உத்தரவு...!

Tue Jun 4 , 2024
இரவு நேரங்களில் ஒரு வாகன ஒட்டி இருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஹரியானா போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை கமிஷனர் கூறியதாவது; ஓட்டுநர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அபராதம் விதிப்பதற்கு முன், மூத்த அதிகாரிகளின் அனுமதி அவசியம் என, துணை போலீஸ் கமிஷனர் வீரேந்திர விஜ், மே 28 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like