fbpx

மாற்றுத்திறனாளிகளே மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா……? அப்படி என்றால் இதை உடனே செய்யுங்கள்…..!

ராணுவ வீரர்களின் வாரிசுகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆரம்பமாகி இருக்கிறது. ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நடைபாண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் பிரிவினுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மண்டல மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை அந்த சான்றை இதுவரையில் பெறாதவர்கள் இணைய வழி மூலமாக விண்ணப்பம் செய்யலாம். ஆனால் கலந்தாய்வுக்கு முன்பாக தகுதிச் சான்றைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் சிறப்பு பிரிவு ஒதுக்கிட்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

பப்ஜியில் மலர்ந்த காதல்..!! பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பெண்..!! பெரும் பரபரப்பு..!!

Wed Jul 5 , 2023
டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மளிகை கடைக்காரை ஆன்லைன் மூலம் காதலித்த பாகிஸ்தான் பெண், தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் பெண் சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சீமா கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்தார். பின்னர் மற்றொருவரை […]
பப்ஜியில் மலர்ந்த காதல்..!! பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பெண்..!! பெரும் பரபரப்பு..!!

You May Like