fbpx

சுயதொழில் தொடங்க ஆசையா..? ஏதேனும் குழப்பம் இருக்கா..? மிஸ் பண்ணாம நாளைக்கு இதை பண்ணுங்க..!!

சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமானது நாளை (15.02.2023) காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிறைவடைந்த அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முதற்கட்ட முகாமில், சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை பற்றி விவரிக்கப்படும்.

இறுதியில் பயிற்சியைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களின் பெயர் பெறப்பட்டு அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 22252081, 22252082, 96771 52265, 8668102600 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Chella

Next Post

சுய உதவிக்குழுவும் சூப்பர் வாய்ப்பும்..!! ரூ.10 லட்சம் வரை கடன்..!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Feb 14 , 2023
சுய உதவிக் குழுக்கள் என்றாலே பெண்களின் அமைப்பு என்றுதான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டில் மொத்த 1.2 கோடி சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில், 12% குழுக்கள் ஆண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இத்திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை. சுய உதவி குழு என்பது கிராம/நகர்ப்புற ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு. உறுப்பினர்கள் தங்களின் அரசியல்/சமுதாய/பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் […]

You May Like