தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒருபுறம் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மறுபுறம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள் ஏராளம். அதுவும் சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பெண்கள் அனைத்து துறையிலுமே முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றனர். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. எனினும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சுயமாக தொழில் தொடங்க ஆர்வமும் இருந்து, அதற்கு வழியில்லாத பெண்களுக்கு தமிழ்நாடு
அந்தவகையில், பெண்கள் மேம்பாட்டு கழகத்தால் சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதுவும் மிக மிக குறைந்த வட்டியில் தரப்படுகிறது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், குடும்ப வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 25 முதல் 55 உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் பியூட்டி பார்லர், காபி தூள், தயாரிப்பு கண்ணாடி உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் கிடைக்கும். மேலும், தொழில் தொடங்குவதற்கு 30% மானிய தொகையும் வழங்கப்படும். பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் உத்யோகினி திட்டம், அன்னபூர்ணா திட்டம், முத்ரா யோஜனா திட்டம், தேனா சக்தி திட்டம், யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம், ஸ்த்ரீ ஆகிய திட்டங்கள் மூலம் பெண்கள் கடன் உதவி பெறலாம்.