fbpx

உங்கள் வீட்டில் செல்வம், பணம் சேர வேண்டுமா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!!

நம் வீடுகளில் செல்வம் மற்றும் பணம் சேர ஆன்மீகத்தின் படி சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கடைப்பிடித்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நாம் செய்யும் சில தவறுகள் தான் பணம், செல்வம் சேருவதற்கு தடையாக அமைந்து விடுகிறது. சரி நாம் என்னென்ன விஷயங்களை கடைப்பிடித்தால் பணம், செல்வம் சேரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1) வீட்டில் பூஜை நடக்கும்போது பெண்கள் தங்களின் கைகளால் விளக்கேற்ற வேண்டும். ஆண்கள் விளக்கு ஏற்றினால் அல்லது ஆண்களை விளக்கு ஏற்ற வைத்தால் அந்த வீட்டில் செல்வம் சேராது என்று சாஸ்திரத்தின் படி சொல்லப்படுகிறது.

2) வீட்டை சுத்தமாக வைத்தால்தான் மகாலட்சுமி வாசம் செய்வாள். அப்போது பணம் செழிக்கும்.

3) வீட்டை சுற்றிலும் ஒட்டடை இருந்தால் அந்த வீட்டில் செல்வம் சேராது. அதே போல் வீட்டின் சுவற்றில் கரையான் புற்று கட்டியிருந்தாலும், பூரான் அடிக்கடி வந்து சென்றாலும் அந்த வீட்டில் செல்வம் சேராது. உடனே அவற்றை சரி செய்வதற்கான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4) வீடுகளில் எச்சில் பாத்திரம் இருந்தால் உடனே கழுவிக் கொண்டே இருப்பார்கள். அதை அப்படியே போட்டு வைத்தால் செல்வம் சேராது.

5) எந்த விஷயத்தையும் நேர்மறையான எண்ணங்களுடன் அணுகுபவர்கள் எப்போதும் செல்வவளத்துடன் இருப்பார்கள். வார்த்தைகளில் இல்லை, வேண்டாம், வராது போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

6) மங்களப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லக்கூடாது. யாசகம் கேட்பவர்களிடம் இல்லை என்ற வார்த்தை செல்லக்கூடாது. அதற்கு பதிலாக வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்தி நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்களிடம் செல்வம் சேராது.

7) வெளிச்சமின்றி இருள் சூழ்ந்த சூழ்நிலையில் வீடானது இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம், பணவரவு நிச்சயம் தடைபடும் என்கிறது சாஸ்திரம். அதனால் ஒரு சிறு மின் விளக்கை ஆவது எப்போதும் எரியும் படி வீட்டில் அமைத்துக் கொள்வது செல்வவளம் பெருகுவதற்கு வழிவகுக்கும்.

8)அன்னபூரணியை அவமதிப்பு செய்பவர்களுக்கு செல்வத்தை தடுக்கும் சாபம் உண்டாகும். வீட்டில் சமையலறையில் எந்த பொருள் தீர்வதற்கு முன்பும் அவற்றை வாங்கி சேகரித்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அரிசி, உப்பு, பால், சர்க்கரை இந்த நான்கு பொருட்கள் தீரும் வரை வாங்காமல் இருப்பது செல்வ வளத்தை தடுக்கும். பணம் வரவு நிச்சயம் தடைபடும்.பொருட்கள் தீரும் தருவாயில் இருக்கும் பொழுதே கடைகளிலிருந்து வாங்கி தேக்கம் செய்து கொள்வது மகாலட்சுமியின் நன்மை கிடைக்கும். இது போல் சில சில விஷயங்களில் மாற்றங்களை உண்டு பண்ணினால் உங்கள் வீட்டிலும் செல்வம், பணம் கொட்டோ கொட்டோவென்று கொட்டும். நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.

Read More: தமிழ்நாட்டில் பேரதிர்ச்சி..!! ஏழை மக்களை கொச்சி அழைத்துச் சென்று சட்டவிரோதமாக கிட்னி விற்பனை..!!

Baskar

Next Post

இந்த விஷயங்கள் மட்டும் வீட்டிற்குள் வரவே கூடாது!! இல்லையெனில் ஆபத்து!!

Thu May 30 , 2024
வீட்டில் சில விஷயங்களை வைத்து அந்த வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஆன்மீகத்தின் அடிப்படையில் நாம் கணித்துவிட முடியும். நம் வீடுகளில் இந்த விஷயங்கள் மட்டும் வந்து விடவே கூடாது. அப்படி வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 1)வீட்டை சுற்றிலும் களை செடிகள் இருந்தால் அதை முதலில் பிடுங்கிவிடுங்கள். வீட்டை சுற்றிலும் தேவையற்ற செடிகள், முட் செடிகள், கொடிகள் போன்றவை வளரக்கூடாது. இது […]

You May Like