fbpx

கம்ப்யூட்டர், செல்போனில் வேலை பார்க்குறீங்களா..? இந்த நோய் பற்றி தெரியுமா..? கண்களுக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில் முக்கியமானது கண்கள் தான். கண்கள் மென்மையானவை, சக்திவாய்ந்தவை, அழகு நிறைந்தவை. எனவே, உங்கள் கண்களை நட்சத்திரங்கள் மீதும், கால்களை தரையிலும் வைத்திருங்கள் என்றார் பிரசித்தி பெற்ற கவிஞர் தியோடர் ரூஸ்வெல்ட். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.10ஆம் தேதி உலக பார்வை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக பார்வை தினம் என்பது குருட்டுத்தன்மை மற்றும் பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக கொண்டாடப்படுகிறது. தற்போதைய சூழலில் நவீன பயன்பாடுகளால் கண்பார்வை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறப்பு கண் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ”மனித வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம், உணவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை தவிர்க்க அனைவரும் முடிந்தவரை ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், கண்களை பாதுகாக்க யாரும் கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. உடல் ஆரோக்கியம் குறைந்தாலும் தடுமாறாமல் நாம் எழுந்து நடப்பதற்கு தேவையானது நல்ல கண் பார்வை. ஆனால், பெரும்பாலான மக்கள், கண்களுக்கு வரும் பாதிப்புகளை உணர்வதே கிடையாது. உலகளவில் 220 கோடி மக்களுக்கு பார்வை குறைபாடுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் பார்வை குறைபாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக நவீன சாதனங்களால் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டேப்லெட்டுகள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்புகள், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பதால் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். சமீப ஆண்டுகளில் சிவிஎஸ் என்னும் கம்ப்யூட்டர் பார்வை நோய்க்குறி (கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்) அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்து வருகிறது.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் 75% பேர், காகிதத்தில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாறியுள்ளனர். கம்ப்யூட்டர்கள் மட்டுமன்றி செல்போன்கள், இ-ரீடர்கள் மற்றும் பிற விஷூவல் திரைகளுக்குள் அதிகளவில் மாறி வருகின்றனர். இதில் கம்ப்யூட்டரால் ஏற்படும் கண் பிரச்சனைகளே கணினி பார்வை நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. இது முழுமையான கண் திரிபு மற்றும் வலியை உள்ளடக்கியது. 50% முதல் 90% கம்ப்யூட்டர் திரைகளில் பணிபுரிவோரை இந்த பாதிப்பு தாக்குகிறது.

இதனால் தொடர்ந்து கண் எரிச்சல், கண் சோர்வு, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆய்வில், 1.3 கோடி மக்களுக்கு தங்களது வேலை சார்ந்தே பார்வை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதில் 76% பேர், கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்களை வைத்து அதிகநேரம் வேலைகளை செய்வோர் என்று தெரிவித்துள்ளது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து பணியாற்ற வேண்டும்.

தொடர்ந்து கணினி மற்றும் கம்ப்யூட்டரிலேயே மூழ்கி இருக்காமல் 30 நிமிடத்திற்கு ஒரு முறை சற்று ஓய்வெடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையை கண்மட்டத்தில் இருந்து 15 முதல் 20 டிகிரி கோணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கண்கள் வறண்டு விடாமல் எப்போதும் ஈரமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டிருக்க வேண்டும். சரியான வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும். கண் கூசுவது போன்ற நிகழ்வுகளை குறைக்க வேண்டும். இவை அனைத்தும் நவீன யுகத்தில் அதிகரித்து வரும் கண் பாதிப்புகளை ஓரளவு கட்டுப்படுத்தும்“ என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!! ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்..!!

English Summary

Take a break once every 30 minutes without being engrossed in the computer.

Chella

Next Post

பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் நாட்டு கோழி குஞ்சுகள்...! எங்கு சென்று விண்ணப்பிப்பது...?

Fri Oct 11 , 2024
Domestic chicken chicks provided by Tamil Nadu government to women...! Where to go and apply

You May Like