fbpx

உங்க குழந்தைகள் விரல் சூப்புகிறார்களா?. அலட்சியம் வேண்டாம்!. இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்!

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது. நம்மில் பலருக்கு நிகழந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம். விரல் சூப்பும் பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாக ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குழந்தைகள் வளரும் பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், மேலும் கீழுமாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் ரத்த ஓட்டம் குறைந்து அதனால் உறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன. குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும். அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Readmore: வெடித்து சிதறிய எரிமலை!. 6,500 அடி உயரத்துக்கு எழும் கரும்புகை!. மக்கள் வெளியேற்றம்!

English Summary

Do your children lick their fingers? Don’t be indifferent! Will become addicted to this habit!

Kokila

Next Post

இந்த பழக்கம் உங்கள் வீட்டில் இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை இருக்காதாம்..!! - கருட புராணம் சொல்வது என்ன?

Mon Oct 28 , 2024
If this habit is present in your home, there will be no unity in the family..!! - What does Garuda Purana say

You May Like