fbpx

மருத்துவர் கற்பழிப்பு, கொலை!. போலீஸ் கமிஷனருக்கு தொடர்பா?. சஞ்சய் ராயின் வாகனம் மூலம் வெளியான தகவல்!

Doctor rape case: கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயின் பைக், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது குற்றம் நடந்த நாளில் (ஆகஸ்ட் 9) வடக்கு கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் செல்ல ராய் இந்த பைக்கைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 2014ல் பதிவு செய்யப்பட்ட பைக், தற்போது விசாரணையின் ஒரு பகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தகவல் வெளியானதும், கொல்கத்தா போலீசார் விளக்கம் அளித்தனர். அந்த பைக் உண்மையில் போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டது. இருப்பினும், அனைத்து அரசு வாகனங்களும் போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்படுவது வழக்கம்” என்று கொல்கத்தா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Readmore: ஷாக்!. ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!. 3 வீரர்கள் பலி!. 4 பேர் படுகாயம்!

English Summary

Kolkata Rape-Murder: Why Was Sanjoy Roy’s Bike Registered Under Police Commissioner’s Name?

Kokila

Next Post

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு...!

Wed Aug 28 , 2024
One person died after a car belonging to actress Rekha Nair collided in Jabargaonpet area of ​​Chennai.

You May Like