தற்போது உள்ள காலகட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது இல்லை. இதனால் உடலில் சிறுவயது முதல் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. குறிப்பாக, பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது ரத்த சோகை தான். இந்த ரத்த சோகை, குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் உள்ளது.
ஆனால் பலருக்கு இந்த பிரச்சனை தங்களுக்கு இருப்பதே தெரியாமல் இருக்கும். ஒருவருக்கு இரத்தசோகை இருந்தால் கடுமையான சோர்வு, மூச்சுத் திணறல், மார்பு வலி, தலைச்சுற்றல், வேகமான இதயத் துடிப்பு, பசியின்மை ஆகியவை இருக்கும். இதற்காக நாம் மருத்துவரிடம் போனால் அவர் நமக்கு இரும்புச்சத்து மாத்திரைகளை மட்டும் தான் கொடுப்பார். இதனால் நமக்கு 100% தீர்வு கிடைக்காது.
இதனால், எடுத்த உடன் எல்லா நோய்களுக்கும் மாத்திரைகளை சார்ந்து இருக்க வேண்டாம். முடிந்த வரை உணவு மூலமாகவே நோய்களை குணப்படுத்துவது தான் சிறந்தது. அந்த வகையில், ரத்தசோகை உள்ளவர்கள் இரும்புச்சத்தை அதிகரிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, ” பெண்களுக்கு 11-11.5, ஆண்களுக்கு 12-12.5 என்ற அளவில் உடலில் இரும்புச்சத்து இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு 35% வரை குறைவாக உள்ளது. தற்போது பலரை பாடாய் படுத்தும் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் சிறு வயது முதல் இரும்புச்சத்தை குறைவாக இருப்பது தான்.
பல பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இரும்புச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணம். எனவே கட்டாயம் சிறு வயது முதல் இரத்த சோகையை சரி செய்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ரத்த சோகையை குணப்படுத்த சிறுதானியங்களில் ஒன்றான கம்பு மிகச் சிறந்தது. அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து கம்பில் தான் உள்ளது.
இதனால் வாரம் இரண்டு முறை, கம்பை சோறாகவோ, கூழாகவோ, அடையாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிடலாம். இப்படி நாம் நமது உணவில் அடிக்கடி கம்பு சேர்த்து வந்தால் இரும்புச்சத்து கட்டாயம் அதிகரிக்கும். இதனுடன் சேர்த்து கறிவேப்பிலை, எள், அத்தி, பேரீட்சை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
Read more: மறந்தும் கூட, இவர்கள் எல்லாம் வாழைப்பழம் சாப்பிடவே கூடாது!!! எச்சரிக்கும் மருத்துவர்..