கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை நாள் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பாலாஜி. இந்த மருத்துவமனையில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது தாய் காஞ்சனாவை புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.அங்கு அந்த பெண்ணுக்கு 6 முறை கீமோ தெரபி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சிகிச்சைகளில் விக்னேஷ் திருப்தி அடையாததால் மருத்துவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்றைய தினம் கத்தியுடன் வந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், டாக்டர் பாலாஜியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து தப்பியோடிய விக்னேஷை அங்கிருந்த மருத்துவமனை காவலர்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறுகையில், மருத்துவர்களின் பாதுகாப்பது குறித்து பல முறை எடுத்துரைத்தும் அரசு சார்ப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்களின் பாதுகாப்புக்கு ஒரு முழு தீர்மானம் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம், என கூறியுள்ளார். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Read more ; கொலை செய்ய கிச்சன் கத்தி.. யாருக்குமே சந்தேகம் வரல..!! இதுதான் நடந்துச்சு..! – சுப்ரியா சாஹு விளக்கம்