சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் ரஜினி. அப்பா, பையன், பேரன் என்று மூன்று தலைமுறையை கடந்தாலும் தற்போதும் ஹீரோவாகவே நமக்கு திரையில் காட்சி அளிக்கிறார். 73 வயதாகும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.
இந்நிலையில் பிரபல அரசிய விமர்சகர் சவுக்கு சங்கர் ரஜினியின் இந்த ஜெயிலர் படம் நிச்சயம் மண்ணை கவ்வும் என பேசி வருகிறார். இது குறித்து பேசிய அவர், 73 வயது ஆகும் ரஜினி நடிக்கும் ஆசையை விடாமல் தொடர்கிறார். அதிலும் ஆக்சன் கதை கேட்டு, நடிக்க முடியாமல் நடித்து வருகிறார். இவர் இவ்வாறு நடிப்பதற்கு காரணம் மக்களின் எதிர்பார்ப்பு தான் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் பொய் அப்படி பார்த்தால் இதுவரை ரிலீஸான பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் ஏன் தோல்வி அடைந்தது. இவரை நம்பி படம் எடுத்தவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
அதே போல் தான் தற்போது ரிலீஸாக இருக்கும் ஜெய்லர் படமும் நிச்சயம் மண்ணை கவ்வும், இவர் இந்த வயதில் ஆக்சன் படங்களை தேர்தெடுத்து நடிப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று கூறியிருக்கிறார்.