இந்திய சினிமாவை ஆளும் ஒரு சில தெலுங்கு கதாநாயகிகளில் ரம்பாவும் ஒருவர். விஜயவாடாவைச் சேர்ந்த ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. 15 வயதில் படிப்பை கைவிட்டு கதாநாயகி ஆனார். 1992 இல் வெளியான சர்கம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை ரம்பா.
தனது 15 வயதில் மலையாளத்தில் அறிமுகமான ரம்பாவின் முதல் படம் வினித்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். தொடர்ந்து அவருடனே அதே ஆண்டில் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு படத்தில் நடித்தார். தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் ரம்பா சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டார்.
ரம்பாவின் மூத்த மகள் லான்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே என பலரும் பார்த்து ஷாக் ஆகினர். அதே சமயம் ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா… ஆச்சர்யம் அடைந்துள்ளனர். ரம்பா போல அவரது மகளும் விரைவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
Read more : அடிவயிறு தொப்பை அடியோடு கரைய.. தினமும் காலையில் இந்த பானத்தை குடித்தால் போதும்..!!