பகல்நேரத்தில் தூங்கினால் பிற்காலத்தில் டிமென்ஷியா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர், தனது X தளத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், பகல்நேர தூக்கம் உடலின் கடிகாரத்துடன் ஒத்துப்போவதில்லை, மேலும் டிமென்ஷியா மற்றும் பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், இரவு பணி பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம், உடல் பருமன் அதிகரிப்பு, அறிவாற்றால் குறைபாடு, நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.
மூளையில் உள்ள புரதக் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் கிளைம்பேடிக் அமைப்பு தூக்கத்தின் போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. எனவே தூக்கம் இழப்பு ஏற்படும் போது, கிளைம்பேடிக் அமைப்பு தோல்வியை எதிர்கொள்கிறது, டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது.
“நல்லா உறங்குபவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள், எடை குறைவாக இருப்பார்கள், மனநல கோளாறுகள் குறைவதுடன், அறிவாற்றலில் நீண்ட காலம் அப்படியே இருக்கும். வழக்கமாக இரவில் நன்றாக தூங்குவது சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டை விளைவிக்கலாம் மற்றும் டிமென்ஷியா மற்றும் மனநல கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
டிமென்ஷியா என்றால் என்ன? டிமென்ஷியா என்பது மூளையில் நரம்பு செல்கள் சேதமடைவதை உள்ளடக்கியது, இது மூளையின் பல பகுதிகளில் ஏற்படலாம். மூளையின் பாதிப்பை பொறுத்து டிமென்ஷியா மக்களை வித்தியாசமாக பாதிக்கிறது.
டிமென்ஷியா ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. நினைவகம், சிந்தனை மற்றும் சமூக திறன்களை பாதிக்கும் அறிகுறிகளின் குழுவை இது விவரிக்கிறது, இது ஒரு நபரின் அன்றாட செயல்பாட்டில் குறுக்கிடலாம் மற்றும் தடுக்கலாம். டிமென்ஷியா பொதுவாக நினைவாற்றல் இழப்பை உள்ளடக்கியது, வேறு காரணங்களால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுவது டிமென்ஷியாவின் அறிகுறி அல்ல. வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் இருந்தால் டிமென்ஷியா ஏற்படலாம்.
டிமென்ஷியாவின் அறிகுறிகள்: டிமென்ஷியாவின் அறிகுறிகள் குறிப்பிட்ட காரணத்தைப் பொறுத்தது. இருப்பினும், மிகவும் வெளிப்படையான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்
மனச்சோர்வு, கவலை, பொருத்தமற்ற நடத்தை, சித்தப்பிரமை, பிரமைகள்
, குழப்பம், ஆளுமை மாற்றங்கள், நினைவாற்றல் இழப்பு, வார்த்தைகளைத் தொடர்புகொள்வதில் அல்லது கண்டுபிடிப்பதில் சிரமம், திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பதில் சிரமம், பகுத்தறிதல் அல்லது சிக்கலைத் தீர்ப்பதில் சிரமம், குழப்பம் மற்றும் திசைதிருப்பல், ஒருங்கிணைப்பு மற்றும் இயக்க செயல்பாடுகளில் சிரமம், சிக்கலான பணிகளைக் கையாள்வதில் சிரமம் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.