இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் பலதரப்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இருப்பினும் மோசடிக்கும்பல், தவறான கூற்றுக்கள் மூலம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.. அந்த செய்தியில் “மாணவர்களுக்கான இலவச ஸ்மார்ட்போன் திட்டம் 2022’ன் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சகம் இலவச ஸ்மார்ட்போன்களை வழங்கும்.. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவுசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது..
இந்நிலையில் இந்திய தகவல் பணியகமான பிஐபி ட்விட்டரில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. அரசாங்கம் இதுபோன்ற எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று செய்தியை மறுத்துள்ளது. மேலும் “ நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இலவச ஸ்மார்ட்போன்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கும் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.. இந்த செய்தி போலியானது. இந்திய அரசு அத்தகைய திட்டத்தை செயல்படுத்தவில்லை,” என்று அது தெளிவுபடுத்தியது. இதுபோன்ற போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று மக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..