fbpx

கணவன் இறந்த பின் மகனுக்கு வரும் சொத்தில் தாய்க்கும் பங்கு இருக்கிறதா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பரம்பரையாக இருக்கும் சொத்தில் குடும்ப வாரிசுகள் அனைவருக்கும் சமமாக பங்களிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. சுயமாக சம்பாதித்த சொத்துக்கு உயில் எழுதவில்லை என்ற பட்சத்தில் வாரிசுகள் அனைவருக்கும் சொத்து சமமாக பிரித்து வழங்க வேண்டும். இந்நிலையில், பிள்ளையின் சொத்தில் தாய்க்கு பங்கு இருக்கிறதா? என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்து வாரிசுச் சட்டம் 1956 இன் படி, ஒரு ஆண் உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவரது ஆண் வாரிசுகளுக்கு அந்த சொத்து சேரும் என்பது விதியாகும். அதில், கீழ்கண்ட அடிப்படையில் சொத்துக்கள் வாரிசுகளை சேரும்.

  • * இறந்தவரின் நேரடி வாரிசுகள்
  • * நேரடி வாரிசுகள் இல்லையென்றால், சட்டத்தில் ஷெட்யூல் 2இல் குறிப்பிடப்பட்டுள்ள உறவினர்களுக்கு
  • * மேலே இரண்டு பிரிவின் படியும் வாரிசு இல்லை என்றால், இறந்தவரின் அப்பா வழி உறவுகளுக்கு
  • * மேலே 3 பிரிவின் படியும் வாரிசு இல்லை என்றால், இறந்தவரின் அம்மாவழி உறவுகளுக்கு

இந்த 4 வகை வாரிசுகளும், 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரடி வாரிசுகளில் (உயிருடன் இருப்பவர்கள்) இறந்தவரின் அம்மா, மனைவி/கணவன், குழந்தைகள் ஆகியவை அடங்கும். இந்த விஷயத்தில், இறந்த நபரின் மனைவி மற்றும் அம்மா இருவருமே சொத்தில் உரிமை கோரலாம். இறந்து போனவர் எந்த உயிலையும் எழுதி வைக்காத பட்சத்தில், நீதிமன்றத்தில் இருந்து வாரிசு சான்றிதழை பெற வேண்டியது அவசியம்.

உயில் எழுதாமல் இறந்து போன நபரின் சட்டப்பூர்வமான வாரிசாக, அவரது சொத்துக்களைப் பெற அந்த சான்றிதழ் உதவும். மகன் இறந்து அம்மாவுக்கு ஏற்கனவே சொத்துக்கள் இருந்தாலுமே, மேற்கூறிய சட்டப்பிரிவின் அடிப்படையில் தன்னுடைய மகனின் சொத்தில் அம்மாவுக்கும் பங்கு இருக்கிறது. கணவர் இறந்துவிட்டார், கணவர் சில சொத்துக்களை சம்பாதித்த வைத்திருக்கிறார். அந்த சொத்தில் தன்னுடைய மாமியார் உரிமை கோருகிறார். மாமியாருக்கு ஏற்கனவே ஒரு சில சொத்துகள் இருக்கின்றன என்று ஒரு கணவனை இழந்த பெண் ஒருவர் விளக்கம் கேட்டுள்ளார்.

அதற்கான விளக்கம் தான் மேலே உள்ளது. இது மிகவும் சிக்கலான வழக்காகத் தோன்றுகிறது. இதனை சட்டப்பூர்வமாக அணுகும் முன்பு முதலில் குடும்பமாக அமர்ந்து பேசி சரி செய்து கொள்ளலாம். கணவனை இழந்த பெண், மகனை இழந்த அம்மா என்று இரண்டு தரப்புமே உணர்ச்சி பூர்வமாக வழக்கை அணுகுவது மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வழக்கறிஞர்களை வைத்து தீர்த்துக்கொள்வது இரண்டு தரப்பிலும் உதவியாக இருக்கும்.

Read More : ஹேப்பி நியூஸ்..!! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை..!! எப்போது தெரியுமா..?

English Summary

Does the mother have a share in the child’s property? Let’s learn about it in this post.

Chella

Next Post

சற்றுமுன்...! "கலைஞர் கனவு இல்லம்" திட்டம்... 25-ம் தேதிக்குள் பயனாளர்களை தேர்வு செய்ய உத்தரவு...!

Tue Jun 18 , 2024
Kalaingar kanavu illam Tamilnadu Government Directed to select beneficiaries by 25th

You May Like