fbpx

சூரியன் உதிக்கிறதோ இல்லையோ? இலைகள் துடிக்கிறதோ இல்லையோ? தாமரை மலர்ந்தே தீரும்..!! தமிழிசை தடாலடி..!!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேஷம் கலையும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நேற்றைய தினம் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், ”சூரியன் உதிக்கிறதோ இல்லையோ? இலைகள் துடிக்கிறதோ இல்லையோ? கைகள் உயர்கிறதோ இல்லையோ? தாமரை மலர்ந்தே தீரும். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கூறி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 எம்பிக்களும் மத்திய பட்ஜெட்டை காண்பித்து போராட்டம் நடத்தப் போகிறார்கள். அது மட்டும் தான் அவர்களால் முடியும்.

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் உரிமையோடு பல திட்டங்களை கேட்டு பெற்று தந்திருக்க முடியும். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்கிறார்கள். ஆனால், இன்று நீங்கள் பல மடங்கு உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பினார். திமுகவின் வேஷம் நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் கலையும் என்றும் தெரிவித்தார்.

Read More : KGF யுனிவர்ஸில் நடிகர் அஜித்குமார்..!! வெளியான மாஸ் அப்டேட்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

English Summary

Former Governor Tamilisai Soundararajan has said that DMK’s disguise is also a trick in the 2026 assembly elections.

Chella

Next Post

சுனிதா வில்லியம்ஸ் விரைவில் நாடு திரும்புவார்..!! - நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Wed Jul 24 , 2024
The mission, known as the Boeing Crew Flight Test, has encountered technical challenges that have delayed the astronauts' return.

You May Like