fbpx

உங்க ஸ்மார்ட்போனில் இந்த பிரச்சனை இருக்கா..? ஆபத்து..!! உடனே இதை பண்ணுங்க..!!

தொழில்நுட்பம் வளர வளர மக்களின் கைகளில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகளும் அதிகரித்துவிட்டன. ஒருவர் கைகளில் ஸ்மார்ட் போன் இல்லை என்றால், அனைவரும் ஆச்சரியமாக பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இருப்பினும், இன்றைய காலகட்டங்களில் பல ஸ்மார்ட்போன்கள் ஆங்காங்கே அதிக வெப்பத்தால் வெடிக்கும் நிலை கூட நிலவுகிறது. இன்றைய நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் எவ்வளவு சூடாகிறது, எவ்வளவு சூடானால் ஆபத்து என்று பலருக்கு தெரியவில்லை. எனவே மொபைல் போனின் வெப்பம் பற்றியும், அதனை குளிர்விக்க வழிமுறைகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உங்களது மொபைல் எப்போது சூடாகும்..?

  1. அதிக நேரம் வீடியோ பார்த்தால்
  2. கேம்கள் விளையாடும் போது
  3. பிரைட்னெஸ் (Brightness) அதிகமாக இருந்தால்
  4. உங்களுடைய ஆப்களை அப்டேட் செய்யவில்லை என்றால்
  5. நேரடியாக சூரிய ஒளியில் வைத்திருந்தால்

ஐபோன் – ஆண்ட்ராய்டு வித்தியாசம்:

மொபைல் போன்களை ஒப்பிடும்போது, ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது. ஐபோன்களில் அனுமதிக்கப்பட்ட ஆப்களை தவிர மற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்ய முடியாது. ஆனால், ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்களோ அல்லது மற்ற ஆப்களோ இன்ஸ்டால் செய்யும் போது விரைவில் வெப்பமடையும். எனவே, ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெப்பமாவதை தவிர்க்க, உங்களுக்கு தெரியாத ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆப்களை அப்டேட் செய்யுங்கள்:

சில ஆப்களில் பழைய சாப்ட்வேர் இருந்தாலோ அல்லது அந்த ஆப்களில் ஏதெனினும் பிழைகள் (Bugs) இருந்தாலோ உங்களது மொபைல்கள் விரைவாக வெப்பமடையும். அதனால் முடிந்தவரை உங்களது ஆப்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

சூரிய ஒளியை தவிருங்கள்:

நேரடியாக சூரிய ஒளியில் உங்களது மொபைல்களை பயன்படுத்துவதால், உங்களது மொபைல் எளிதில் வெப்பமடையும். ஆகையால், முடிந்தவரை சூரிய ஒளி உங்கள் மொபைல்கள் மேல் படுவதை தவிருங்கள். நீங்கள் வெளியில் உங்களது மொபைல்களை பயன்படுத்த வேண்டுமானால், நிழலில் வைத்து பயன்படுத்துங்கள்.

சார்ஜ் போடும் போது கவனம்:

உங்கள் ஃபோனை சார்ஜ் போடும் போது, சோஃபா அல்லது பெட் போன்றவைகள் மேல் வைத்தால், அதன் வெப்பம் வெளியில் செல்லாமல் உங்களது மொபைல் மேலும் வெப்பமடையும். எனவே சார்ஜ் போடும் போது உங்களது மொபைல்களை கடினமான இடத்தில் எளிதில் வெப்பத்தை வெளியேற்றும் பரப்பின் மேல் வைத்து சார்ஜ் போடுங்கள். சில நேரங்களில் உங்களது சார்ஜர் கூட பிரச்சனையாக இருக்கலாம்.

ஆப்களை க்ளோஸ் செய்யுங்கள்:

நீங்கள் ஒரு ஆப்பை பயன்படுத்தி, அப்படியே ஹோம் பட்டனை அழுத்தினால், அந்த ஆப் பின்னால் செயல்பாட்டில் இயங்கிக் கொண்டே இருக்கும். ஆகையா, ஒரு ஆப்பை பயன்படுத்தி முடித்துவிட்டால், அதனை ரீசண்ட் ஆப்களில் சென்று க்ளோஸ் செய்துவிடுங்கள்.

பிரைட்னஸை குறைவாக பயன்படுத்துவது:

உங்களது போனின் பிரைட்னஸ் அளவு கூட மொபைல்கள் வெப்பமாவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களது மொபைல்கள் வெப்பமாவதை தவிர்க்க, பிரைட்னஸை குறைவாக பயன்படுத்துவது நல்லது.

ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்:

சில நேரங்களில் உங்களது மொபைல் போன்களில் வைரஸ் இருந்தால் கூட வெப்பமடையும். ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் உங்களது மொபைல் போன்களில் இருந்தால், உங்களது மொபைல்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும்.

மொபைல்கள் வெப்பமானால் எப்படி குளிர்விப்பது?

உங்களது மொபைல்கள் அடிக்கடி வெப்பமானால், பேட்டரியை அது பாதிக்கும். இதனால் உங்கள் மொபைல்களை நீங்கள் விரைவில் மாற்றும் சூழல் ஏற்படலாம். எனவே உங்கள் மொபைல்கள் வெப்பமானால் நீங்கள் அதனை குளிர்விப்பது அவசியம்.

மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்வது:

உங்களின் மொபைல் போன் வெப்பமாக இருந்தால், நீங்கள் உங்களது போனை ஸ்விட்ச் ஆப் செய்யலாம். இது உங்களது அனைத்து ஆஃப்களின் செயல்பாடுகளை நிறுத்தி, உங்கள் மொபைல் போன் குளிர்விக்க உதவும். போனின் வெப்பம் குறைந்த பிறகு, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்து கொள்ளலாம்.

உங்கள் மொபைல் கேஸை நீக்குவது :

உங்களின் மொபைல் வெப்பமானால், வெப்பம் வெளியேற உங்கள் மொபைல் கேஸை கழட்டுவதும் தீர்வாக இருக்கும். உங்களின் ஸ்மார்ட்போன் வெப்பமாக உள்ளது என்று உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்தால், இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

அதிகபட்சம் உங்களது போன் எவ்வளவு சூடாக இருக்க வேண்டும்?

உங்களது போன் அதிகபட்சம் 95 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கலாம். உபயோகப்படுத்தும்போது, 32 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 0 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை உங்களது மொபைல் போன் இருக்கலாம். அதற்கு அதிகமாக வெப்பம் இருந்தால், உங்களது மொபைலை குளிர்ச்சியாக்க வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.

Chella

Next Post

’அது எப்படி திமிங்கலம்’ மொமண்ட்..!! ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி அடுத்த நாளில் ரிலீசாகும் படம்..!!

Wed Apr 5 , 2023
ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி அடுத்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய ‘பிதா’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் 7ஆம் தேதி காலை படப்பிடிப்பு தொடங்குகிறது. அன்றே எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங் போன்ற அனைத்துப் பணிகளையும் முடித்து, மறுநாள் 8ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.சுகன் எழுதி இயக்கும் இதில் அனு, ஆதேஷ் பாலா, அருள்மணி, சாம்ஸ் நடிக்கின்றனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசையமைக்கிறார். பாபா கென்னடி […]
’அது எப்படி திமிங்கலம்’ மொமண்ட்..!! ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி அடுத்த நாளில் ரிலீசாகும் படம்..!!

You May Like