ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை சாமர்த்தியமாக மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
ஒருவர்மரக்கட்டையை தூக்கி ஆற்றில் வீசியதும் மரக்கட்டையை பிடிக்க விழுந்த நாய் மரக்கட்டையை வாயில் கவ்விக்கொண்டு நீந்த முடியாமல் தவிக்கின்றது. பின்னர் முயற்சித்து தான் கவ்விய மரக்கட்டையை கரையில் நின்றிருந்த நாய்க்கு கவ்வ சிறு இடம் கொடுத்தவுடன் அந்த மரக்கட்டையை வாயால்கவ்வி எடுத்து கரைக்கு மீட்கின்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
வாயில் கவ்விக் கொண்டிருந்த மரக்கட்டையை கவ்வி சாமர்த்தியமாக தனது நண்பனை காப்பாற்றியுள்ளது.
இந்த வீடியோவை கேப்ரியல்கேனோ என்பவர் பகிர்ந்துள்ளார். இதுவரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஐந்தறிவு உயிரான நாயின் குணம் டுவிட்டரில் பாராட்டுக்களை குவித்து வருகின்றது.இந்நிலையில் ஏன் வீடியோ எடுத்தவர் நாயை காப்பாற்றவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.