ஆக்ரோஷமான மற்றும் கொடூரமான நாய் இனங்களான ராட்வீலர்கள், பிட்புல்ஸ், டெரியர்கள், உல்ஃப் நாய்கள் மற்றும் மாஸ்டிஃப்கள் ஆகியவற்றின் இறக்குமதி இனப்பெருக்கம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆக்ரோஷமான நாய்களின் கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுடுத்தப்பட்டுள்ளது.
டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கூட்டப்பட்ட நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, இந்த உத்தரவு கலப்பின நாய்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த நாய் இனங்கள், மேலும் இனப்பெருக்கம் செய்வதை தடுப்பதற்கு உடனடியாக கருத்தடை செய்ய வேண்டும் என கால்நடை மற்றும் பால் பண்ணை துறை வலியுறுத்தியுள்ளது.
தற்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள நாய் இனங்களின் பட்டியல் :
ராட்வீலர்கள், டெரியர்கள், பிட்புல் டெரியர்கள், டோகோ அர்ஜென்டினோஸ், அமெரிக்க புல்டாக்ஸ், போயர்போல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்கள், காகசியன் ஷெப்பர்ட் நாய்கள் ஜப்பானிய டோசாஸ், டோசா இனுஸ், அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷயர் டெரியர்கள், ஃபிலா பிரேசிலிரோ, டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், கங்கல், அகிடாஸ், மாஸ்டிஃப்ஸ், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய், கேனரி நாய்கள், அக்பாஷ், மாஸ்கோ காவலர்கள், கேன் கோர்சோஸ்.
Read More : Warning | நீங்க கடை வெச்சிருக்கீங்களா..? ஏப்ரலுக்கு இதை செய்யாவிட்டால் அபராதம்..!!