பொதுவாக ஒரு வீட்டின் அழகு என்பது அந்த வீடு சுத்தமாக இருப்பதை பொறுத்து தான். இதனால் பலர் தங்களின் வீடுகளை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்வது உண்டு. ஆனால், பல நேரங்களில் நாம் சுவரில் படிந்து இருக்கும் ஒட்டடையை மறந்து விடுகிறோம். அப்படி நாம் ஒட்டடையை சுத்தம் செய்தாலும், ஒரே வாரத்தில் மீண்டும் ஒட்டடை வந்து விடும். வேலை காரணமாக வாரம் முழுவதும் பிசியாக இருக்கும் பலருக்கு இப்படி அடிக்கடி ஒட்டடையை சுத்தம் செய்ய முடியாது. இதனால், ஒட்டடையை சுத்தம் செய்யாமல் விட்டு விடுவார்கள். ஆனால் அது நல்லது அல்ல. அது உங்கள் வீட்டின் அழகையே கெடுத்துவிடும். ஆனால் நீங்கள் இனி கவலை பட வேண்டாம். இந்த பொருளை பயன்படுத்தி ஒரு முறை சுத்தம் செய்தால் போதும்.. பிறகு உங்கள் வீட்டில் ஒட்டடை அவ்வளவு சீக்கிரத்தில் படியாது.
இதற்க்கு உங்களுக்கு தேவைப்படும் ஒரு பொருள்,லைசால். ஆம், லைசால் வீட்டின் தரையை துடைப்பதற்கு மட்டும் இல்லாமல், சுவரை துடைக்கவும் பயன்படுத்தலாம். இதற்க்கு நீங்கள் லைசாலை வைத்து ஒரு லிக்விட் தயார் செய்ய வேண்டும். இந்த லிக்விட் செய்ய, ஒரு டப்பாவில், லைசால் 1 மூடி, கம்ஃபோர்ட் 1 மூடி, தண்ணீர் 1 சின்ன டம்ளர் ஊற்றி நன்கு கலந்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான். நமக்கு தேவையான லிக்விட் தயார்.. இப்போது, ஒரு திக்கான காட்டன் துணியை இந்த லிக்விட்டில் நனைத்து, அதை ஒட்டடை குச்சி மேல் விட்டு ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்கள். இப்போது இந்த குச்சியால் உங்கள் வீடு முழுவதும் ஒட்டடை அடியுங்கள். நீங்கள் ஒட்டடை அடிக்கும் போது, அந்த துணியில் இருக்கும் லைசால் ஈரம் சுவற்றின் மூளை முடுக்குகளில் பட வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் ஒட்டடை படியாது. இதை ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..
Read more: 72 வயதில், மூன்றாவது திருமணத்திற்கு ஆசைப்பட்ட முதியவர்; பாசமாக பழகிய காதலி செய்த காரியம்..