fbpx

இங்கிலாந்தின் துணை பிரதமராக டொமினிக் ராப்!!

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக், துணை பிரதமராக டொமினிக் ராப்-ஐ நியமித்துள்ளார்.

டெமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் டொமினிக் ராப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இருந்தவர்களை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.
இதனிடையே வணிக செயலாளர், ஜேக்கப் ரீஸ் மோக் , நீதித்துறை செயலாளர் , பிராண்டன் லூயிஸ் , வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் , மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்டு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அலோகட் சர்மா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தின் நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்ந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை ரிஷி சுனக் செய்ய இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளர்ச்சியை உறுதி செய்வேன் … ’’ மக்களின் நலன் , வியாபாரிகளின் நலன்களை கருத்திக் கொண்டே அரசின் செயல்பாடுகுள் இருக்கும் , நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பேன் . எனது தலைமையிலான அரசு உங்கள் குழந்தைகள் பேரக்குழந்தைகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் என தனது உரையில் பிரதமர் ரிஷி சுனக் பேசி உள்ளார்.

Next Post

’இது வெறும் ட்ரெய்லர்தான்’..!! 2 லாரிகளில் ஆவணங்கள்..!! ஷாக்கான தேர்தல் ஆணையம்..!! தாக்கிய உத்தவ்..!!

Wed Oct 26 , 2022
தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க, உத்தவ் தாக்கரே அணியினர் 2 லாரிகளில் பிரமாணப் பத்திரங்களை எடுத்துச் சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. மேலும், உத்தவ் தாக்கரே – ஷிண்டே அணிக்கு தனித்தனி பெயர், சின்னத்தை வழங்கியது. அத்துடன், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் […]

You May Like