நம் முன்னோர்கள் சருமத்திற்கு பயன்படுத்தி வந்த பொருட்களில் கழுதை பாலும் ஒன்று. கழுதை பால் நம் சருமத்துக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.
எகிப்து ராணி கிளியோபாட்ரா ஒரு பேரழகி. அவர் தனது சருமத்திற்கு தினமும் கழுதைப்பாலில் தான் குளித்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஹிப்போக்ரேட்டிஸ் காய்ச்சல், காயங்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கழுதைப்பாலை பயன்படுத்த பரிந்துரைத்தார்.
சருமத்திற்கு பயனளிக்கும் கழுதை பால்:
கழுதைப் பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை மங்க செய்கிறது. சேதமடைந்த சருமத்தை மீண்டும் சரி செய்ய உதவுகிறது. மேலும் கழுதைப்பாலில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் எரிச்சல் மற்றும் சிவத்தல் ஆகியவற்றை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. அதோடு, சருமம் வயதான தோற்றத்தை கொண்டிருந்தால் கழுதை பால் பயன்படுத்துங்கள். சீக்கிரமே பலன் கிடைக்கும்.
சருமத்துக்கு வைட்டமின் டி என்பது முக்கிய மூலப்பொருளாகும்.இயற்கையாகவே வைட்டமின் டி உள்ள கழுதை பால் சிறந்த மாற்றாகும். இந்த பாலை அடிக்கடி தடவி வந்தால் சருமம் பளபளப்பாக மாறும். மேலும் கழுதைப் பால் சருமத்தை மென்மையாக்குகிறது. இது சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது என்பதை பயன்படுத்தியவர்களே உணர்வார்கள். கழுதைப்பாலை தொடர்ந்து பயன்படுத்தினால் அது சருமத்தை சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுத்துவதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் சரும பராமரிப்புக்கான முக்கிய மூலப்பொருளாக கழுதை பால் பயன்படுத்தினால் சருமம் ஜொலிக்க செய்யும். அதனால் தான் கழுதை பாலை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. உங்களுக்கு கழுதை பால் கிடைத்தால் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.
Read More:புதுசா இடம் வாங்கி இருக்கீங்களா? பட்டா வாங்குவது ரொம்ப ஈசி!! ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி?