fbpx

அலட்சியம் வேண்டாம்..!! உடனே மாத்துங்க..!! இல்லைனா உங்க வங்கிக் கணக்கு வரை ஆபத்து..!!

இணையத்தில் பல்வேறுத் தேவைகளுக்காக ஏராளமான கணக்குகளையும் அவற்றைத் திறப்பதற்கான பாஸ்வேர்டுகளையும் கையாண்டு வருகிறோம். ஆனால், அந்த பாஸ்வேர்டை பாதுகாப்பாக கட்டமைக்கிறோமா என்பது பெரும் கேள்விக்குறியே. பாதுகாப்பு குறித்த அலட்சியம் உள்ளிட்ட காரணங்களினால், ஊகிக்க மிகவும் எளிதான பாஸ்வேர்டுகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

இவை இணையத்தில் அலையும் ஹேக்கர்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைக்கும்..! தனிப்பட்ட தகவல்களை சேமித்திருக்கும் கணக்குகள், தகவல்தொடர்புக்கானவை, வங்கி பரிவர்த்தனை கணக்குகள் உள்ளிட்ட பல ரக கணக்குகளை கையாள்வதில் இந்தியர்கள் வெகு அலட்சியம் காட்டுவதாக நோர்ட்பாஸ் எச்சரித்துள்ளது. அப்படி பெரும்பாலானோர் கையாளும் பாஸ்வேர்ட் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது.

அவற்றில், ’123456, admin, password, admin@123, pass@123, india@123, abcd@123, password@123’ உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை எந்தவித சிரமமும் இன்றி ஹேக்கர்கள் முதல் நமக்கு வேண்டாதவர்கள் வரை எவரும் மோப்பமிட முடியும். பாஸ்வேர்ட் கட்டமைப்பதில் அலட்சியம் காட்டிவிட்டு, பின்னர் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி இருப்பு வரை இழந்து வருந்துவதில் பயனில்லை. எனவே, பாஸ்வேர்ட் என்பதை அவற்றுக்கான உரிய வழிகாட்டுதல்களுடன் கட்டமைப்பதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது ஐயம் எழும்போதெல்லாம் உடனடியாக அவற்றை புதிதாக உருவாக்கி பயன்படுத்துவதே நல்லது.

Chella

Next Post

ஷாலினி தனியாக சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? அடேங்கப்பா இவ்வளவா..?

Tue Nov 21 , 2023
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் ஷாலினி. இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படங்களில் பிஸியாக […]

You May Like