fbpx

’என் அப்பா பெயரை சொல்லி யாரும் அழைக்காதீங்க’..!! ’அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது’..!! பரபரப்பை கிளப்பிய மாரியப்பனின் பேட்டி..!!

பாரா ஒலிம்பில் தொடர்ந்து 3 முறை பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாரியப்பன்.

பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் 1.94 மீட்டர் தாண்டிய அமெரிக்காவின் ஏல்ரா தங்கப் பதக்கத்தையும், 1.88 மீட்டர் தாண்டிய இந்தியாவின் சரத் குமாருக்கு வெள்ளிப் பதக்கமும், 1.85 மீட்டர் தாண்டிய தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 3 பாராலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்று மூன்றிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் படைத்துள்ளார்.

இந்நிலையில் தான், மாரியப்பன் கடந்த 2016ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்ற அவர், அப்போது அளித்திருந்த பேட்டியில், ”எனது வெற்றிக்கு காரணம் சத்யநாராயணா சார் தான். இந்த வெற்றிக்கு பின் எனது தாயார் சொல்லும் தகவல்கள் என்னை சோகமாக்குகிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் எங்களை மதிக்காத பலரும், தாயாரை தேடி வந்து நெருக்குகிறார்கள். எனது தாயையும், 4 குழந்தைகளையும் தவிக்கவிட்டு சென்ற தந்தை, திடீரென உரிமை கோருவதாக கூறி அழுகிறார்.

சிறு வயதில் எனது தாயை எரித்துக் கொலை செய்ய முயற்சித்தவர் அவர். எனது அம்மாவுக்கு கொஞ்சம் கூட கருணையே காட்டியதில்லை. அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது. என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும்” என்று தெரிவித்திருந்தார்.

Read More : தமிழ்நாட்டின் ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்..!! இல்லையென்றால்..!! மிரட்டல் விடுக்கும் வாட்டாள் நாகராஜ்..!!

English Summary

Mariyappan from Salem has created the record of becoming the first athlete to win three consecutive medals in the Para Olympics.

Chella

Next Post

எக்ஸ்-இல் கொண்டு வந்த சூப்பரான வசதி!! அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யலாம்.. எப்படி வொர்க் ஆகும்?

Wed Sep 4 , 2024
X users can now edit DMs: Here's how to use this feature

You May Like