fbpx

கண்ணு வைக்காதீங்க.. என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடணும்..!! – நடிகை குஷ்பு

காமெடி கலந்த கமர்ஷியல் படங்கள் இயக்குவதில் கில்லாடியான சுந்தர் சி, கடந்த 2013-ம் ஆண்டு விஷாலை வைத்து இயக்கிய படம் தான் மதகஜராஜா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் சந்தானம், மனோபாலா, மயில்சாமி, மணிவண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது.

மதகஜராஜா திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் நிதிப்பிரச்சனையால் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சுமார் 12 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக மதகஜராஜா திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதனிடையே நேற்று (ஜனவரி 11)மதகஜராஜா திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சிக்கு குஷ்புவும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்புவிடம் சுந்தர் சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த குஷ்பு, ” என் வீட்டுக்காரருக்கு திருஷ்டிதான் சுத்திப் போடணும். கண்ணு வெச்சுடாதீங்க ப்ளீஸ். இந்தப் படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.

ஆனா ஒரு விஷயம் 12 வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்தப் படத்துக்கு எவ்வளவு உழைச்சாருன்னு எனக்குத் தெரியும். அதற்கான வரவேற்பை நீங்க இப்பக் கொடுக்குறீங்க. இந்தப் படத்தைப் பார்க்கும்போது 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் மாதிரி இல்ல. இப்ப எடுத்த படம் மாதிரிதான் இருக்கு. சுந்தர் சியை என்டர்டெயின்மென்ட் கிங்னு சொல்லுவாங்க. அதை மறுபடி மறுபடி நிருபிச்சுக்கிட்டே இருக்காரு.அதனால வீட்டுக்குபோய் எங்க அத்தைகிட்ட திருஷ்டி எடுக்க சொல்லணும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Read more ; “நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் மா, என்கூட உல்லாசமா இரு” விதவை பெண்ணுக்கு, திமுக நிர்வாகி செய்த காரியம்!!

Next Post

"மத்தவங்க முன்னாடி நான் உடை மாத்திருக்கேன்" நடிகை ஷகிலா ஓபன் டாக்!

Sun Jan 12 , 2025
actress shakila opens up about her personal life

You May Like