fbpx

’குடிச்சிட்டு யாரும் மாநாட்டுக்கு வராதீங்க’..!! தவெக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க வரும்போது மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வர வேண்டும். எந்த வகையிலும் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும், நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, மாநாட்டுக்குப் பெண்களைப் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்குத் தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி மிகவும் பாதுகாப்புடன் தொண்டர்களை அழைத்து வர வேண்டும். மாநாட்டில் மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு தனியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக் கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : ’உன் பொண்டாட்டியை நான் தான் வெச்சிருக்கேன்’..!! ’ஒழுங்கா விவாகரத்து கொடு’..!! ஆட்டோ டிரைவரை மிரட்டும் போலீஸ்..!! பரபரப்பு புகார்..!!

English Summary

Those who come to the conference should not come after consuming alcohol. Violators will be denied entry to the convention hall after consuming alcohol

Chella

Next Post

ஷாக்!. அரைகுறை ஆடையுடன் உலா!. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!. தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்!

Thu Sep 26 , 2024
Shock!. Walk half-dressed!. Minister who warned! Threatened to commit suicide!

You May Like