fbpx

வெட்ட வேண்டாம் , தைக்க வேண்டாம் : பிரான்ஸ் அறிமுகப்படுத்திய அற்புத ஆடை ! ஸ்ப்ரே பண்ணா போதும்..

பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெட்ட வேண்டாம் , தைக்க வேண்டாம் அப்படியே ஸ்ப்ரே பண்ணா போதும் .. இது பற்றிய தகவலை பார்க்கலாம்..

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று வித்தியாசமான ஆடைகளை மாடல் அழகிகளுக்கு அணிவித்து அணிவகுத்தனர். அப்போது பெல்லா ஹடிட் என்ற பிரபலமான மாடல் அழகி ஒருவர் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாணமாக நடந்து வந்தார். அவர் அருகே சென்ற இரண்டு நபர்கள் அவரது உடலில் தாங்கள் கொண்டு வந்த திரவ நிலையில் இருந்த ஒரு பொருளை ஸ்ப்ரே செய்தனர்.

5 நிமிடத்திலேயே அவரது உடலில் வெள்ளை நிறத்தில் அழகான ஆடை தோன்றிவிட்டது. இதைப்பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். இந்த ஸ்ப்ரேவில் உள்ள மெட்டீரியல் ஃபேப்ரிக்கன் என்ற பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்ப்ரேவை உடலில் தெளித்தவுடன் சிறிது நேரத்தில் துணியாக மாறிவிட்டது. பின்னர் உடை வடிவமைப்பாளர்கள் வந்து சில இடங்களில் சரி செய்தனர்.

பருத்தி மற்றும் சிந்தடிக் இழைகளால் திரவ நிலையில் ஃபேப்ரிக்கன் என்ற ஸ்ப்ரே தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் , இந்த ஆடை வடிவில் மாறிய திரவத்தை எடுத்து மீண்டும் கரைசலாக மாற்றி மறுமுறை பயன்படுத்திக்கொள்ளமுடியும் என இதை கண்டுபிடித்த வோக் பிசினஸ் தெரிவித்துள்ளது.

ஃபேப்ரிகன் என்ற நிறுவனம் இந்த வகை மெட்டீரியலை உருவாக்கியுள்ளது. இதை உருவாக்கிய அந்த விஞ்ஞானியின் பெயர் மானெல் டோரஸ். அவர் கோபர்னி என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆறுமாத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

இது பற்றி மீயர் என்பவர் கூறுகையில் ’’ இது அடுத்தபடியான பெருமளவு சந்தையில் இடம்பிடித்து லாபத்தை தரும் என எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஒரு கணம் புதிய படைப்பை உருவாக்குவதற்காக செய்துள்ளோம் ’’ என்றார்.

Next Post

தாஜ்மஹாலை கட்டியது யார் ? ஷாஜகான்தான் கட்டினாரா? உச்சநீதிமன்றத்தில் மனு..

Sat Oct 1 , 2022
தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே யார் தாஜ்மஹாலை கட்டியது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான காதல் சின்னம் தாஜ்மஹால். ஷாஜகான் என்ற மன்னர் தனது மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அளவுகடந்த காதலால் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் படித்து வருகின்றோம். இந்நிலையில் ஷாஜகான்தான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதற்கான ஆதாரம் அறிவியல் […]

You May Like