தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அதிக அளவில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தான் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சுமார் 4.8 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். எனினும் பிரபலமான தளங்கள் மக்களின் ஆதரவை இழந்து வருகின்றன என்றும் கூறப்பட்டது.
அந்த வரிசையில் தான் தற்போது, இந்த 2023ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட செயலிகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் TRG Datacenter வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி, இந்தாண்டு அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியலில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியான இன்ஸ்டாகிராம் தான் முதலிடத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது என்பது பற்றி ஒவ்வொரு மாதமும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேடி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 2023ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தில் உள்ளது. மேலும் அந்த பட்டியலில் மக்கள் அதிக அளவில் தங்கள் நேரத்தை செலவிடும் செயலிகளான சினாப்சாட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற ஆப்ஸ்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.