fbpx

வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்த விஷயத்தை பண்ணாதீங்க..!! ஆன்மீக சாஸ்திரம் சொல்வது என்ன..?

இந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் ஒரு சிலர் ஜாதகம் மற்றும் ஆன்மீகம் போன்றவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பல விஷயங்களை துணிந்து செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் ஏதேனும் ஒரு பொருள் வாங்குவதாக இருந்தாலும் கூட, ஜோதிட சாஸ்திரத்தின்படியும், ஆன்மீக சாஸ்திரத்தின்படியும் ஆராய்ந்து வாங்குவார்கள்.

அந்த வகையில் ஆன்மீக சாஸ்திரத்தின்படி, சில விஷயங்களை செய்யக் கூடாது. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதன்படி, உங்கள் வீட்டில் இருந்து ஆடை, ஆபரணங்கள், பொன் மற்றும் பொருள் ஆகியவற்றை புதன்கிழமை அன்று யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதையும் மீறி கொடுத்தால், உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி அவர்களிடம் சென்று விடுவார் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது ஒருபோதும் பூஜை அறையில் விளக்கு ஏற்றக் கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகு தான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். மாவிலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாவிலை ஒரு சில நகரங்களில் எளிதாக கிடைக்காததால், பிளாஸ்டிக் மற்றும் பித்தளை ஆகியவற்றலான மாயிலையை தோரணமாக கட்டுகின்றனர்.

ஆனால், பிளாஸ்டிக் மற்றும் பித்தளை ஆகியவற்றால் என மாவிலை தோரணம் கட்டக்கூடாது. வீட்டில் சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். காலையில் கேட்க முடியவில்லை என்று மதிய நேரத்திலோ அல்லது மாலையில் கேட்பதோ அவ்வளவு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது.

Read More : வறண்ட காலநிலைக்கு பெயர் பெற்ற நாட்டில் இப்படி ஒரு அதிசயமா..? நீங்களே பாருங்க..!!

English Summary

Never light a lamp in the puja room when someone is sleeping in the house.

Chella

Next Post

அடடே..!! வெட்டிவேரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? முகம் அழகாக இதை எப்படி பயன்படுத்த வேண்டும்..?

Wed Nov 6 , 2024
Mix water with Vetiver and apply it on your face and let it dry for 15 minutes to get rid of pimples and make your face beautiful.

You May Like