fbpx

கோடை காலத்தில் ஃபிரிட்ஜ் வாட்டரை குடிக்காதீங்க..!! மண் பானை நீரின் நன்மைகள் பற்றி தெரியுமா..?

எந்த சீசனிலும் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. முன்பெல்லாம் கோடைகாலம் என்றாலே பல வீடுகளை மண் பானை ஆக்கிரமித்து கொள்ளும். ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. நீங்கள் எப்போதாவது மண் பானையில் இருக்கும் தண்ணீரை குடித்திருக்கிறீர்களா.? உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க அத்தியாவசியமான தண்ணீரை குடிக்க பல வழிகள் இருந்தாலும், மண்பானை தண்ணீரை குடிப்பது என்பது பழங்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் ஒரு அற்புத வழிமுறையாகும்.

இப்போது ஐஸ் வாட்டர் குடிக்க மக்கள் ஃபிரிட்ஜ் பயன்படுத்தி வரும் நிலையில், நம் முன்னோர் மண் பானைகளை பயன்படுத்தி இயற்கையாகவே குளிர்ச்சியான தண்ணீரை குடித்து அதன் மூலம் பல பலன்களை பெற்றனர். இந்த கொளுத்தும் கோடையில் மண்பானை தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ள இந்தப் பதிவை படியுங்கள்.

இயற்கையான குளிர்ச்சி :

மண் பானையில் வைக்கப்படும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியடையும். இதற்கு காரணம் களிமண் பானையின் மேற்பரப்பில் உள்ள சிறிய துளைகள் வழியாக நீர் விரைவாக ஆவியாகிறது. இந்த Evaporation Process-ன் போது பானையில் உள்ள நீர் வெப்பத்தை இழந்து அதன்வெப்பநிலையை குறைந்து இயல்பாகவே கூலிங்காகிறது.

சளி மற்றும் இருமல் வராமல் தடுக்கிறது :

கோடை காலத்தில் பெரும்பாலும் பலரும் ஐஸ் வாட்டர் குடிக்கவே விரும்புவார்கள். ஃபிரிட்ஜ்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை அப்படியே நேரடியாக குடிப்பதால் அரிப்பு மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்படலாம். ஆனால், மண்பானை தண்ணீர் இது போன்ற எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது. பானை நீர் சரியான வெப்பநிலையில் இருப்பதால் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமான உணர்வை தருகிறது. மேலும் சளி மற்றும் இருமல் வராமல் தடுக்கிறது.

அல்கலைன் :

நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் பெரும்பாலானவை உடலில் அமிலத்தன்மையை உண்டாக்கி மாசுக்களை ஏற்படுத்துகின்றன. மனித உடல் இயற்கையில் அசிட்டிக் அதாவது அமிலத்தன்மை மிக்கது. அதே நேரம் களிமண் அல்கலைன் தன்மை அதாவது காரத்தன்மை கொண்டது. எனவே, மண் பானைகளில் உள்ள தண்ணீரை குடிக்கும் போது உங்கள் உடலின் அமில தன்மையுடன் வினைபுரிந்து சரியான pH சமநிலையை உருவாக்க மாற்றம் அதனை பராமரிக்க உதவுகிறது. மண்பானை தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி மற்றும் வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது :

களிமண் பானையில் வைக்கப்படும் தண்ணீரை தினமும் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். ஏனெனில், களிமண்ணை கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது மற்றும் இதில் எந்த வகையான கெமிக்கல்ஸ்களும் இல்லை. இது தவிர தண்ணீரில் உள்ள தாதுக்கள் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சன்ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது :

வெயில் காலத்தில் பலரையும் தாக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் சன் ஸ்ட்ரோக். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் களிமண் பானையில் வைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது சன்ஸ்ட்ரோக்கை தடுக்க உதவும். மண்பானை தண்ணீரில் இருக்கும் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உடலின் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுவதோடு, உங்கள் உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும்.

பாதுகாப்பானது :

களிமண் பானைகள் தண்ணீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்தி குளிர்ச்சியாக நமக்கு அளிக்கின்றன. மேலும், இதன் Porous Microtexture மாசுக்களை சிக்க வைக்கிறது. இதனால் பாதுகாப்பான குடிநீர் நமக்கு கிடைக்கிறது.

Chella

Next Post

CWC-இல் புது ட்விஸ்ட்..!! 2 வைல்டு கார்டு போட்டியாளர்களின் என்ட்ரியால் கதிகலங்கிய மற்ற போட்டியாளர்கள்..!!

Thu Apr 27 , 2023
குக் வித் கோமாளி (CWC)நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், அந்நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 3 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 4-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இன்னும் 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். அந்த வகையில் தற்போது மைம் கோபி, […]

You May Like