மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை ஆனைகட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ”குடியினால் எல்லோருக்கும் பிரச்சனை ஏற்படும். கள் குடியுங்கள், டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். டெல்லிக்கு போற ஒரே வண்டி இந்த வண்டிதான், மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி. பழங்குடியின மக்களின் பாதுகாவலனாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய அவர், குடிக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும்” என்றார்.
Read More : Drugs | போதைப் பொருள் கடத்தல் வழக்கு..!! இயக்குனர் அமீரிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!