பொதுவாக பழங்கள் என்றாலே நம்மில் பலருக்கும் பிடிக்கும்.. பெரும்பாலான மக்களின் விருப்பமான பழங்களில் அன்னாசிப் பழமும் ஒன்று.. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளது.. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மெலும் அன்னாசிப் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகப்படியான அன்னாசிப் பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அன்னாசிப் பழத்தை உட்கொள்ளும் முன்பு, ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க சர்க்கரை நோயாளிகள், பழத்தை சாப்பிடும் அளவைக் கருத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் சி நிறைந்த பழங்களை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..
எனவே அன்னாசிப் பழங்களை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.. அன்னாசிப் பழத்தில் அதிக குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை நிறைந்துள்ளது. இதனால் சிலருக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். அரை கப் அன்னாசிப் பழத்தில் உள்ள 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதுமட்டுமின்றி, அன்னாசிப் பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இந்த நொதிக்கு நமது உடல் சில எதிர்வினைகளை காட்டுகின்றன.. இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாக இல்லை என்றாலும், மருந்துகளுடன் சேர்த்து அன்னாசி பழத்தை எடுத்துக் கொண்டால், இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்..
அன்னாசிப் பழத்தின் அமிலத்தன்மையின் விளைவாக ஈறுகள் மற்றும் பல் மோசமடையக்கூடும். மேலும், இது வாய் வழி ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே போல் அன்னாசி பழச்சாறு அருந்துவோர் கவனமாக இருக்க வேண்டும். இது அசௌகரியமான வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.. எனவே வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளக் கூடாது.