fbpx

குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீர்கள்!… உடல் பருமனை குறைக்கும் டிப்ஸ் இதோ!… ஆய்வும்! அறிவுரையும்!

குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அவை விரைவாக உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் தெருக்களில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வீடியோ கேம், செல்போன், டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்களைத்தான் அதிகம் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதனால் உடல் ரீதியாக செயலற்றவர்களாக மாறிவிட்டார்கள். இவை எளிதில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடுகின்றன. ஆரம்ப நிலையிலேயே உடல் பருமன் பிரச்சினையை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

இந்தியாவில் சுமார் 1 கோடியே 40 லட்சம் குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்றும் உடல் பருமன் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் நாளடைவில் இது நோய்கள் ஏற்பட நேரிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலமாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம். துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

ஆரோக்கியமான உணவுகளை விட ஜங் ஃபுட்ஸ், ஸ்நாக்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைத்தான் குழந்தைகள் அதிகமாக விரும்புகின்றனர். இதனால் ஆரோக்கியமான உணவைத் தவிர்க்கின்றனர். இதன் விளைவு உடல் பருமனை அதிகரிக்கிறது.சிறுவர்களுக்கு இனிப்பு என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் அதுதான் அவர்களுக்கு எதிரியும் கூட. எனவே முக்கிய நிகழ்ச்சிகளின் போது மட்டும் இனிப்பு வகைகள் உண்ணப் பழக்கப்படுத்துங்கள். தினமும் உண்டால் உடல் பருமன் தான் அதிகரிக்கும். கியாஸ் நிறைந்த ஜுஸ் வகைகளையும் சிறுவர்கள் அதிகமாகக் குடிப்பார்கள். அதிலும் நாம் தினசரி பயன்பாட்டை மீறிய சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அதிகமான இனிப்பு சுவை உடல் பருமனுக்கு வித்திடும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Kokila

Next Post

உடலுக்கு அலர்ட் செய்யும் இஞ்சி!... எப்படி? எதற்காக தெரியுமா? ஆய்வின் விவரம் உள்ளே!

Sat Feb 25 , 2023
உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை இஞ்சி அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. முழுவிவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உணவின் சுவையை அதிகரிப்பதோடு, அபரிமிதமான மருத்துவ குணங்களைம் இஞ்சி உள்ளடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கிறது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்கி நன்மை பயக்கும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மேலும் இதயத்தை தீவிர […]

You May Like