fbpx

’குடையை மறக்காதீங்க’..!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை..!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செப்.18) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.19ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

’குடையை மறக்காதீங்க’..!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை..!!

செப்.20ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செப்.21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.22ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

’குடையை மறக்காதீங்க’..!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை..!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு; கூடுதல் பதவிகள்.. பள்ளி கல்வித்துறை... அரசாணை வெளியீடு..!

Sun Sep 18 , 2022
சென்னை, தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெற தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க பள்ளிகூடங்கள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் […]

You May Like