fbpx

பிள்ளைகளுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும்போது இதை மட்டும் மறந்துறாதீங்க..!! அப்புறம் ஒன்னுமே செய்ய முடியாது..!!

வயதான காலத்தில் பிள்ளைகள் ஏமாற்றினால், அவர்களிடம் சொத்தை பறிகொடுத்தால், நிச்சயம் சட்டம் உங்களைக் காக்கும். இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பதிவினை பற்றியும், பெற்றோர்கள் சொத்தை எழுதி கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ”பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 பிரிவு 23 இன் படி, அடிப்படை வசதிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் ஒரு சொத்து பிள்ளை அல்லது உறவினருக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகு சொத்தை பெற்றுக் கொண்டவர் அதை செய்ய தவறினால, அந்த சொத்து பரிமாற்றம செல்லாது என தீர்ப்பாயம் அறிவிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த சட்டப்பிரிவின் கீழ் முதியோர்கள் தாராளமாக பிள்ளைகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்க முடியும். சப் கலெக்டரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ புகார் அளித்து பத்திரப்பதிவினை ரத்து செய்ய வைக்க முடியும். ஆனால், அதில் சில சிக்கலும் உள்ளது. பல முதியவர்கள், தங்களது வயதான காலத்தில், தனது பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், சொத்தை தானமாக எழுதிக்கொடுக்கின்றனர். அப்படி சொத்தை எழுதி கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு சொத்தை எழுதிவைக்கும்போது, வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். ‘அன்பின் வெளிப்பாட்டால்’ சொத்தை எழுதிவைப்பதாக குறிப்பிட்டிருந்தால், தானமாக கொடுத்த சொத்தை பெற்றோர் உடனடியாக மீட்டுக்கொள்ள முடியும். பிள்ளைகள் மீதான பாசத்தின் காரணமாக இறுதிவரை சொத்தை திருப்பி கேட்காமல் தங்கள் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஒரு உண்மை கதையை இப்போது பார்ப்போம்.

கணவன்-மனைவி, அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். நன்றாக சம்பாதித்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார். தன்னிடம் இருந்த சேமிப்பு, சொத்து, அனைத்தையும் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தார். ஒரு காலக்கட்டத்தில் அவரது மனைவி இறந்துவிட்டார். அவரிடம் அப்போது சொத்துக்களோ, சேமிப்பு பணமோ சுத்தமாக இல்லை. மனைவி இருந்தவரை சாப்பாடு கேட்காமலேயே வரும். சாப்பாடு சரியில்லை என்றால் தட்டு பறக்கும். ஆனால், மனைவி மறைந்த பின்னர் அவர் நடைபிணமாக மாறினார்.

அவர் பசித்தாலும் மருமகளிடம் சாப்பாடு கேட்க தயங்கினார். சாப்பாட்டை போட்டு சாப்பிட பயந்தார். காரணம் மருமகள் பேச்சு வேறுமாதிரி இருந்தது. மகனோ எதையும் கண்டுகொள்ளவில்லை. சாப்பாடு கேட்க முடியாமல், செலவுக்கு பணம் கூட இல்லாமல் தவித்து வந்தார். மகளும் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. அவரிடம் ஒரு வேளை சேமிப்போ, சொத்தோ இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை பிள்ளைகள் மதித்திருப்பார்கள். பாவம் கடைசி வரை எதையும் வெளியில் சொல்லாமல் வேதனையை மனதில் வைத்துக் கொண்டு மறைந்து போனார். அவர் சொத்தை திருப்பி கேட்க வேண்டும் என்ற மனநிலை எல்லாம் அவருக்கு வந்தது கூட இல்லை.

Chella

Next Post

வருது.. வருது.. விலகு.. விலகு.. வந்தாச்சு ஜல்லிக்கட்டு 2024.! தேதி மற்றும் இடம் அறிவிப்பு.!

Thu Jan 4 , 2024
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும் இவற்றில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை.. 2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா […]

You May Like