fbpx

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இதை கவனிக்காம வாங்காதீங்க..!!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் எல்லா வீடுகளிலுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உங்களிடம் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பட்டவை. மேலும், பாதுகாப்புக்காக சிலிண்டர் மேல் பாதுகாப்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன. பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப சிலிண்டர்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்து சிலிண்டர்களுமே குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டியது அவசியம். புதிய சிலிண்டர் 10 ஆண்டுகள் கழித்து பரிசோதிக்கப்படும். பின்னர், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பரிசோதிக்கப்படும்.

சிலிண்டர்களை நிரப்பும் ஆலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களால் சிலிண்டர்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதிக்கப்பட்ட பின் அடுத்த சோதனைக்கான தேதி ஒட்டப்பட்டு சிலிண்டர் அனுப்பி வைக்கப்படும். அனைத்து சிலிண்டர்களிலுமே அடுத்த பரிசோதனைக்கான காலம் எப்போது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, உங்கள் சிலிண்டரில் A 2022 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2022 ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். B 2022 என குறிப்பிடப்பட்டிருந்தால், 2022 ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும்.

C 2022 என குறிப்பிட்டிருந்தால் 2022 ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். D 2022 என குறிப்பிடப்பட்டிருந்தால் 2022 அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுக்கு ஏற்ப நாம் அடுத்த பரிசோனைக்கான காலத்தை கணித்துக் கொள்ளலாம். சிலிண்டருக்கான அடுத்த பரிசோதனை எப்போது என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா? என்பதை உறுதி செய்ய முடியும். நம் வீட்டில் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றாலும், எல்லா சிலிண்டர்களுமே நிரப்பப்படுவதற்கு முன்பாக அடுத்த பரிசோதனைக்கான தேதி சரிபார்க்கப்பட்ட பிறகே நிரப்பப்படுகின்றன. அதேபோல விநியோகஸ்தர்களும் அடுத்த பரிசோதனைக்கான தேதியை சரிபார்த்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : திசை மாறி பணம் வைத்தால் காணாமல் போய்விடும்..!! பணம் வைக்க சரியான திசை இதுதான்..!!

English Summary

Gas cylinders used for cooking are used in all homes. However, are these cylinders safe? It is important to ensure that How do you know if your cylinder is safe?

Chella

Next Post

இஸ்ரேலின் கொடூரம்!… 4 பேருக்காக 210 பேரை கொன்ற அரக்க குணம்!

Sun Jun 9 , 2024
Hamas said 210 people were killed in Israeli airstrikes on the central Gaza Strip to rescue four hostages.

You May Like