fbpx

தெரியாம கூட இனி கறிவேப்பிலையை மற்றவர் கைகளில் கொடுத்துராதீங்க..!

பொதுவாக நமது முன்னோர் கூறிய பல அறிவியல் சார்ந்த விஷயங்களை நாம் மூட நம்பிக்கை என்று நினைக்கிறோம். ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் கூட, பல அறிவியல் சார்ந்த விஷயங்களை நம் முன்னோர் கூறியுள்ளனர். அப்படி அவர்கள் கூறிய ஒன்று தான் கறிவேப்பிலையை மற்றவர் கைகளில் கொடுக்கக் கூடாது என்பது. ஆம், கறிவேப்பிலை இல்லாமல் சமையலே இல்லை என்று கூறும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இலையை பற்றி நம்மில் பலரும் அறியாத விசித்திரமான விஷயம் ஒன்று உள்ளது. ஆம், அந்த விஷயத்தால் தான் நாம் பெரும்பாலும் எல்லா உணவிற்கும் கறிவேப்பிலையை சேர்க்கிறோம்.

கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாது என நமது முன்னோர்கள் கூறியதை நாம் சாஸ்திரம் என நினைக்கிறோம். ஆனால், கறிவேப்பிலையை மற்றவர் கைகளில் கொடுக்கக் கூடாது என கூறியமைக்கு காரணம் கறிவேப்பிலைக்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகம். எனவே, இதனை நாம் மற்றவர்களின் கைகளில் நேரடியாக கொடுக்கும் போது அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் (Negative energy) கடத்தப்படுகின்றது. அதாவது, நாம் ஒருவர் கைகளில் கறிவேப்பிலையை கொடுத்தால் அவர்களுக்கும் நமக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு அதிகம், அதற்கு காரணம் எதிர்மறை சக்திகள் கடத்தப்படுவது தான்.

இதனால் தான் முன்னோர்கள் வீட்டு முற்றத்தில் கறிவேப்பிலை செடியை வளர்ப்பதில்லை. மேலும், குழம்பில் கறிவேப்பிலையை சேர்ப்பதற்கும் காரணம் இது தான். ஏனென்றால், குழம்பில் ஏதாவது சிறிய அளவில் காணப்படும் நச்சித் தன்மையை கூட இந்த கறிவேப்பிலை உறிஞ்சிக்கொள்ளும். கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கின்றது என்பது அறிவியல் உண்மை. அதனால் இனி நாம் இதை பின்பற்ற முயற்சிப்போம்..

Maha

Next Post

தோசை ஊத்த மாவு இல்லையா? இனி தோசை செய்ய மாவு தேவையில்லை..

Mon Oct 2 , 2023
பொதுவாக இட்லி, தோசைக்கு மாவு அரைத்தால் எப்போது காலியாகும் என யாருக்கும் தெரியாது. தோசை சற்று முறுகலாக இருந்தால் 2 தோசை சாப்பிடுபவர்கள் கூட 4 அல்லது 5 சாப்பிடுவார்கள். இப்படி தோசை மாவை வைத்து இந்த பொழுதை கடத்தி விடலாம் என்று இல்லத்தரசிகள் நினைக்க வேறொன்று நடந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் தோசை மாவு இல்லாமல் இனி தோசை செய்து விடலாம். எப்படி தெரியுமா?? வாருங்கள் பார்ப்போம்.. ஒரு […]

You May Like