fbpx

”வேலைநிறுத்தம் வேண்டாம்… பணிக்கு வாங்க”..!! ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை..!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால், தமிழக பேருந்துகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படும். மேலும், பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், vஅரும் 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும். சேம மற்றும் தினக்கூலி பணியாளரக்ள் கட்டாயமாக பணிக்க வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

BREAKING: இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம்…!

Fri Jan 5 , 2024
மிசோரம் மாநிலம் லங்லை என்ற பாகுதியில் இன்று காலை7.18 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “மிசோரம் மாநிலம் லங்லை பகுதியில், இன்று காலை 7.18 மணியளவில், ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது […]

You May Like